Monday, August 28, 2017

பேலியோ பனீர் கொத்துமல்லி இட்லி



முக நூல் இன்பாக்ஸ்ல சைவ பேலியோ மெனு கேட்டு இருந்தாங்க

இந்த பனீர் இட்லி காலை  டிபனுக்கு இட்லி சாப்பிடலையேன்னு இருக்கும் ஏக்கத்தை தீர்க்கும்
இத்துடன் நான் தேங்காய் சட்னி அரைத்துள்ளேன், காரசாரமாக தக்காளி சட்னி அரைத்து சாப்பிட்டால் செம்மையா இருக்கும்.

இல்லை வெஜ் குழம்பு மற்றும் கார குழம்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
பனீர் கொத்துமல்லி இட்லி (பேலியோ பனீர் கொத்துமல்லி இட்லி)

தேவையான பொருட்கள்

பனீர் – 100 கிராம்
தேங்காய் துருவல் அரை கப்
கொத்துமல்லி – கீரை அரைகப்
பச்சமிளகாய் – 2
உப்பு
தயிர் – இரண்டு தேக்கரண்டி
இட்லி சோடா சிறிது

செய்முறை
பனீரை தண்ணீரில் கழுவி , கொத்துமல்லி கீரையை சுத்தம் செய்து மிக்சியில் இட்லிமாவு பதத்துக்கு , மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
இட்லி தட்டில் நெய்யை தடவி இட்லியாக வார்க்கவும்.சுவையான பனீர் இட்லி கூட தொட்டு கொள்ள கிரேவி அல்லது சால்னா சட்னி வகைகளை வைத்து சாப்பிடலாம்.


பேலியோ டிபன்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

புதிய வகை இட்லி.
செய்முறை விளக்கமும் சுலபமா இருக்கு.

Jaleela Kamal said...

செய்து பாருங்கள் சே குமார்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா