Monday, November 28, 2016

கத்திரிக்காய் முள்ளங்கி சூப்


#Paleo #diet#soup
#veg##clear #soup #for #perfectdiet
#சைவம்
#பேலியோடயட்சூப்
\சூப்
#Brinjal #Radish
#பேலியோ 

டயட் சூப்/எடை குறைக்க/வெயிட் லாஸ்
எந்த டயட் ஆக இருந்தாலும்  ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு எதுன்னு கேட்டால் நான் அனைவருக்கும் பரிந்துரைப்பது சூப் தான்.

கீரை சாறு, காய்கறி தண்ணீ சாறு, இல்லை காய்கறி கீரை வகைகளை வேகவைத்து லேசாக ப்ளன்ட் செய்து அப்படியே குடிப்பது, சிக்கன் போன் சூப், மட்டன் நல்லி எலும்பு சூப், ஆட்டு கால் சூப், இறால் மற்றும் இறால் தலை சூப், மீன் தலை சூப் , நண்டு சூப் இப்படி பல வகை சூப் வகைகளை தயாரித்து குடித்தால் ஆரோக்கியமாக  வாழலாம்,
(அறுவை சிகிச்சை நடந்து சிலருக்கு சாலிட் டயட் சாப்பிட கூடாது அப்படி உள்ளவர்களுக்கு இப்படி சத்தாக தயாரித்து அதை சாற்றை மட்டும் வடித்து கொடுக்கலாம்)
டயட்டில் தண்ணீர் தான் 8 டம்ளர் குடிக்கனும் என்றில்லை சூப் ஜுஸ் பால் தயிர் எதுவாக இருப்பினும் சாப்பிடலாம்.

நோயாளிகளோ அல்லது இதய நோயாளிகளோ , ஜுரம், சளி, ஆர்தடைஸ் பிராப்ளம் உள்ளவர்கள் , தொண்டைபுண் வந்து ஒன்றும் சாப்பிட முடியவில்லை என்றால், குழந்தைகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு எல்லாருக்குமே ஒரு தெம்பான ஊட்ட சத்து அளிக்கும் ஒரு அருமையான சாப்பாடு வகை சூப் தான் , தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கு.
எந்த சூப்பாக இருந்தாலும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து செய்யுங்கள்


எல்லா வகையான காய்கறிகளிலும் , கீரை வகைகளிலும் இந்த சூப்பை செய்து சாப்பிடலாம்.
சுலபமான சூப் எப்படி செய்வது என பார்ப்போம்


தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – முன்று
முள்ளங்கி – ஒரு துண்டு – 100 கிராம்
இஞ்சி துருவியது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – 4 டம்ளர்

செய்முறை

கத்திரிக்காய் முள்ளங்கி துருவி கொள்ளவும்.
ஒரு பெரிய வயகன்ற சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு,சீரகம், மஞ்சள் தூள், துருவிய கத்திரிக்காய், முள்ளங்கி மற்றும் இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
ஒரு டம்ளர் வற்றும் வரை தீயின் தனலை மிதமாக வச்சி வேக விடவும் ( ஸ்லோ குக்கர்).
பிறகு வடிகட்டி தேவைக்கு குடிக்கவும்.


கவனிக்க: இதை பிலன்டரில் லேசா பிளன்ட் செய்து வடிகட்டாமலும் குடிக்கலாம்.
சூப் உடன் கிரில்ட் சிக்கன் மட்டன் அல்லது கிரில் பனீர் வைத்து சாலட் உடன் சாப்பிடலாம்.அல்லது கறிவடை மட்டன் வடை, காய்கறி வடை இதுபோல பக்க உணவு செய்து சாப்பிடலாம்.
சூப் இரண்டு வகை ஒன்று சூப் கு தேவையான காய்களை வேகவைத்ட்து விட்டு அதை பிளன்ட் செய்து அப்படியே மறுபடி கொதிக்க வைத்து குடிப்பது.
மற்றொன்று வேகவைத்து அந்த சூப் சத்துக்களை வடிக்கடி குடிப்பது.
அதில் இது தண்ணீ சாறு சூப் , லிக்விட் டயட் எடுப்பவர்களுக்கு இது உதவும்.
இது போல நான் எல்லா காய்கறிகளிலும் அதாவது டேஸ்ட் இல்லாத காய்களில் செய்து சூப்பாக குடிக்கலாம். பாகற்காயில் கூட இப்படி செய்யலாம் ஆனால் கசப்பு தெரியாமல் இருக்க இதில் பொன்னாகன்னி கீரை மற்றும் கேரட் சேர்த்துகொள்ளலாம்.
( கேன்சர் உள்ளவர்களுக்கு நான் இது போல எல்லாகாய்கறிகளிலும் செய்து கொடுத்து இருக்கேன்) 8 வ்ருடம் முன் 15 நாளில் அவரின் #சோர்வை சரி செய்து இருக்கேன்.
ஆக்கம்

Samaiyalattakaasam Jaleela Kamal


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா