Friday, February 26, 2016

நிகாப், ஷால், ஹிஜாப் - 2016

2016 Latest Model Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece)






Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail 

Dubai Burka Group fb

Price Detail Contact me on my 

whatsapp=00 971 55 9608954 Dubai.


whatsapp=00 971 55 9608961 Dubai.



Half and Half shawl









4line Big Shawl 
Length - 63 Inch
Width - 28 inch

all colours avAilable by order
wholesale and retail



4 லைன் பனியன் ஷால் பெரிய ஷால் 

அகலம் - 28 இன்ச்
உயரம் - 63  இன்ச்




Half And Half shawl
Double colour Shawl
Model no: Sh 491 B



Model No : Sh 429 D

6 line stone work shawl

Big Shawl
Baniyan cloth

Model No : Sh 429 D

Model No : Sh 429 D




Cotton with Zari work Shawl
Self Design




Baniyan shawl with Stones
Very Big Shawl
Model No: NONO : 175
Length - 73
Width - 52




Stone with cotton shawl
Crush work shawl

Cotton Shawl



Zari work shawl


Plain Hijab





Double colour hijab

model no.643



Model No : 643



Head Cap - Net type





Head Cap







Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail 

Three Layer Nose Piece - Niqab



Single Nose piece and three layer nose piece
Niqab





Burka pin 


Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail 

2016 Latest Model- Burka/Abaya/Shual Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece) Hand Clov - Socks 




CHENNAI PLAZA 
No, 277/30 Pycrofts Road, 1st Floor, (opp:shoba cut piece) 
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787 

Dubai Burka Group 
 whatsapp 00 971 55 9608954 Dubai.






Regards

Jaleelakamal







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, February 22, 2016

ஸ்ராபெர்ரி சீஸ் கேக் வித் அகர் அகர் - Strawberry Cheese Cake with Agar Agar






ஹார்ட் ஷேப் ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

தேவையான பொருட்கள்
பேஸ் தயாரிக்க
சாக்லேட் சிப் பிஸ்கேட் – 5 எண்ணிக்கை
பட்டர்                  - 4 தேக்கரண்டி
ஓட்ஸ்                 - இரண்டு தேக்கரண்டி

சீஸ் பில்லிங்

தயிர்                   - 200 கிராம்
பனீர்                   - 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ்   - இரண்டு துளி
சர்க்கரை               - 6 தேக்கரண்டி அல்லது கண்டென்ஸ்ட் மில்க் முன்று மேசைகரண்டி ( கூடுதல் இனிப்பு சாப்பிடுபவர்கள் கொஞ்சம் அதிகம் சேர்த்து கொள்ளலாம்)
அகர் அகர் பவுடர்      - ஓன்னறை தேக்கரண்டி
தண்ணீர்               - முக்கால் டம்ளர்

ஸ்ட்ராபெர்ரி           - 7 எண்ணிக்கை

மேலே கிலேஸ் தயாரிக்க
தண்ணீர் – அரை டம்ளர்
ஸ்ட்ராபெர்ரி – பழம் – 3
சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
ரூ ஆப்ஷா எசன்ஸ் – அரை தேக்கரண்டி




Agar Agar Picture







செய்முறை

முதலில் சாக்லேட் சிப் பிஸ்கேட்டை பொடித்து கொள்ளவும் அத்துடன் ஓட்ஸ் கலந்து பட்டரை உருக்கி சேர்த்து கலந்து எந்த கேக் பாத்திரத்தில் செய்ய கிழே  அரை இன்ச் சைஸ் க்கு கலவையை போட்டு நன்கு அழுத்தி குளீரூட்டியில் 10 லிருந்து 15 நிமிடம் செட்டாக்கவும்.


அடுத்து தயிரை முன்னமே ஒரு மஸ்லின் துணியில் வடித்து எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரியை பொடியாக அரிந்து வைக்கவும். அகர் அகர் பவுடரை தண்ணீர் சேர்த்து காய்ச்சவும் காய்ச்சி அதில் அரிந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி கொதிக்க விட்டு அத்துடன் தயிர் , பனீர், சேர்த்து ப்ளென்ன்டரில் அடிக்கவும், ப்ளெண்டர் இல்லாதவர்கள் மிக்ஸியிலும் அரைக்கவும் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி அதை ஏற்கனவே குளீரூட்டியில் வைத்த பிஸ்கேட் கலவை மீதி ஊற்றவும். முக்கால் பதம் வரை ஊற்றி மறுபடியும் குளிரூட்டியில் 2 மணி நேரம் அல்லது அது செட்டாகும் வரை குளிர வைக்கவும்.

மேலே கிலேஸ் க்கு

அகர்அகரை தண்ணீரில் காய்ச்சி , ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடியாக அரிந்தோ அல்லது அரைத்தோ சேர்த்து சர்க்கரை மற்றும் ரூ ஆப் ஷா எசன்ஸ் சேர்த்து காய்ச்சி செட்டாகிய சீஸ் கேக் மேலே ஊற்றவும். மறுபடியும் குளீரூட்டியில் சிறிது நேரம் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.

இதை பிஸ்கேட் பாட்டம் இல்லாமலும் கப்களில் செய்யலாம்.

இந்த சீஸ் கேக்கில் மேலே உள்ளது தேங்காய் பால் ரூ ஆப்ஷா அகர் அகர்


இதுல நான் வெஜ் சாப்பிடுபவர்கள் ஜெலட்டின் பயன் படுத்தலாம் ஜெலட்டின் பயன் படுத்தினால் இன்னும் நல்ல கிரிப்பாக வரும்.

இது சைவ பிரியர்களுக்காக கொடுத்தது.

// இது பேலியோ டயட்டுக்கு உகந்த சமையலும் கூட, பேலியோவில் அவகோடா பழம் மட்டும் தான் பயன் படுத்தனும் ஆகையால் ஸ்ராபெர்ரிக்கு பதில் அவகோடா பழம் பயன் படுத்தி கொள்ளலாம். , இங்கு சேர்க்கும் சர்க்கரை , கன்டென்ஸ்ட் மில்க்கு பதில் டார்க் சாக்லேட் கோக்கோ பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.

இது ஜெலட்டினில் செய்த என் மற்ற குறிப்புகளை கிழே உள்ள குறிப்பில் காணலாம்.





*****************************


ரூ ஆப்ஷா தேங்காய் ஜெல்லி
 Ingredients 
ஒரு டம்ளர் தண்ணீர்
5 கிராம் அகர் அகர் பொடித்து கொள்ளவும்
சர்க்கரை தேவைக்கு
ரூ ஆப்ஷா – 2 மேசைகரண்டி
தேங்காய் பவுடர் – இரண்டு மேசைகரன்டி
Method
அகர் அகரை பொடித்து தண்ணீரில் ஊறவைத்து காய்ச்சவும் காய்ச்சி கெட்டியாகவரும் போது சர்க்கரை ரூ ஆப்ஷா தேங்காய் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி காய்ச்சி ஒரு வாயகன்ற தாம்பாளதட்டில் வைத்து ஆரவைத்து குளிரூட்டியில் குளிரவைத்து செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


இதில் சீஸ் கேக்குக்கு ஸ்ட்ரா பெர்ரி பழம் தான் என்றில்லை மாம்பழ சீசனில் மாம்பழம் மற்றும் பல பழவகைகளில் இதை செய்யலாம்.
சீஸ் கேக்கு அதில் கிரீம் சீஸ் மற்றும் விப்பிங் கிரீம் சேர்க்கவேண்டும். அல்லது தயிரை வடிகட்டி அந்த கெட்டி தயிர் மற்றும் பனீர் பயன் படுத்தி செய்யலாம். இனிப்பு சுவைக்கு சர்க்கரை அல்லது கண்டெஸ்ட் மில்க் பயன் படுத்தலாம்.
கிழே பேஸ் க்கு டைஜிஸ்டிவ் பிஸ்கேட் அல்லது ஓரியோ, அல்லது சாக்லேட் சிப் பிஸ்கேட் பயன் படுத்தலாம்.

Strawberry Cheese Cake with Agar Agar

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 16, 2016

சீஸ் கேக் தயாரிக்க பயன்படுத்தும் ஜெலட்டின் சைவமா?



My Article published in Kungumam thozi monthly magazine15.02.16 .No Bake Party Dessert.

(Agar Agar, china Grass picture) (substitute for gelatin agar agar) For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.

 சீஸ் கேக்கு ஜெலட்டினுக்கு பதில் அகர் அகர் பயன்படுத்தலா?

 கடல்பாசி என்னும் அகர் அகர் பற்றின பதிவு இந்த மாதம் 15.02.16 குங்குமம் மாத இதழில் வெளியாகி உள்ளது.



இப்போது செய்கின்ற பார்டி மெனுவில் அதிகமாக இடம்பெறுவது சீஸ் கேக் என்னும் ஜப்பான் நாட்டு டெசர்வகை. 
இதில் கிரீம் சீஸ் பழங்கள் கலந்து கேக் போல ஓவனில் பேக் செய்யாமல் குளுரூட்டியில் வைத்து குளிர வைத்து செட் செய்வது இதில் அது குழைந்து விழாமல் கெட்டியாக கிரிப் கொடுக்க இதில் ஜெலட்டின் பவுடரை பயன் படுத்துகிறார்கள்.
 இதில்  அசைவ பொருட்கள் சேர்த்து செய்கிறார்கள் என தெரிய வருகிறது. எதிலிருந்து தயாரிக்கிறார்கள் நாம் சாப்பிடலாமா கூடாதா என்று சந்தேகப்படும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் , 

அகர் அகர்/கடல் பாசி/சைனாகிராஸ் - (Agar Agar, china Grass picture)


(substitute for gelatin agar agar) 
For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.
ஜெலட்டினுக்கு பதிலாக நோன்புகாலங்களில் நாங்க செய்யும் கடல் பாசி என்னும் அகர் அகரை பயன்படுத்தி செய்யலாம். இது உடல் நலத்திருக்கு மிகவும் நல்லதும் கூட எந்த செயற்கை பொருளும் கலந்து இருக்கிறதோ என்ற சந்தேகம் இல்லாமல் இதை பயன் படுத்தி செய்துகொள்ளலாம்.
உடல் நலத்துக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம்.
ஜெலட்டின் சேர்த்து பயன் படுத்தும் ரெசிபிகளுக்குபதில் அகர் அகரை பயன் படுத்தலாம்.
 கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .




சீஸ் கேக்
புட்டிங்
பழ புட்டிங்
கேக் வகைகளும்
சாக்லேட் மௌஸ்
இது போல பல டெசர்வகைகளுக்கு அகர் அகரை பயன் படுத்தாலாம்.
 அகர் அகர் பவுடரும் கலர் கலராக ப்ளேவரில் கிடைக்கிறது.
சீஸ் கேக் ரெசிபி அடுத்த பதிவில் போடுகிறேன்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/