Tuesday, January 12, 2016

பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை



பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை
Panch Phoron with Stir Fry Vegetables




தேவையானவை

காய்கறிகள்
காலிப்ளவர்
கோவைக்காய்
புரோக்கோலி
கேரட்
கத்திரிக்காய்
சிவப்பு குடமிளகாய்
எல்லாம் சேர்த்து – அரை கிலோ
உப்பு


தாளிக்க

நல்லெண்ணை – 2 மேசை கரண்டி
பாஞ்ச் பூரன் - (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
பச்சமிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது






செய்முறை

காய்கறிகளை அரிந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கருகாமல் தாளித்து காய்களை சேர்த்து நன்கு வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து சிம்மில் அனைத்துகாய்களையும் வேகவிட்டு கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
கவனிக்க :குஜராத் பெங்காலிகள் சமையலில் இந்த 5 வகை அஞ்சறை பெட்டி பொருட்கள் இல்லாமல் சமையல் கிடையாது. இதை( கருஞ்சீரகம், சோம்பு, கடுகு , சீரகம், வெந்தயம்) சம அளவில் கலந்து வைத்து கொண்டால் காய் வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

கருஞ்சீரகம் பூரி, ரொட்டி பரோட்டா வகைகளுக்கு நான் அடிக்கடி பயன் படுத்துவேன். எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் இந்த கருஞ்சீரகம், .





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

மாதேவி said...

குஜராத்தில் பாஞ்பூரன்என்பார்கள் என்பதைஇன்றுதான்அறிந்துகொண்டேன்.
நாங்கள் தாளிதம்என்போம்.தினமும் மதிய உணவுகளுக்கு கலப்பார்கள்.

Jaleela Kamal said...

வாங்க மாதேவி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
இதை ஆல்ரெடி நாங்க இதில் கருஞ்சீரகம் ,ரொட்டி , சப்பாத்தி செய்யும் போது சேர்ப்போம்.கருஞ்சீரகத்தை அப்படியே இரண்டு தினம் சாப்பிட்டாலும் நல்லது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.மற்ற கடுகு சீரகம் சோம்பு வெந்தயம் எல்லாம் நாம் பொரியலுக்கு சேர்ப்பது தானே..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா