Tuesday, January 27, 2015

ஜாலி கார்னர் ,சாட்டர்டே போஸ்ட், என் கெஸ்ட் போஸ்ட் -துபாயில் பெண்கள் தொழுகை

வலைஉலக அன்பு தோழி சாதனை அரசிகளை வெளிகொணர்ந்த அரசிக்கு அரசி யிடம் இருந்து ஒரு மெயில்என்ன வென்றால்


தேனக்கா: //அன்பின் ஜலீலா நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .


ஜலீலா : // என்ன தேனக்கா, நீங்கள் பல நாளிதழ்களில் பிரபலம், கவிதை, சமையல், பேட்டி, என்று அசத்தல், நீயா நானா வில் பேசி இருக்கீங்க, பல சாதனை அரசிகளை பேட்டி எடுத்து அதை சிறிது சளைக்காமல் அதே சூட்டோட்டு சூடான பஜ்ஜி , போண்டா போல பிளாக்கில் உடனே பகிர்ந்துகொள்கிறீர்கள்.//

( ஆறிபோன வடை போல டிசம்பர் 6ந்தேதி நீங்க போட்ட பதிவை நான் எப்ப போட்டு இருக்கேன் பாருங்கள்)  

என்னை லேடிஸ் ஸ்பெஷல் நாளிதழிலில் அறிமுக படுத்தியதே நீங்க தான் / என் வளர்சியில் உங்கள் பங்கும் உண்டு.


என்னுடைய வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர், சாட்டர்டே போஸ்ட் என்ற இரு இடுகைகள் வெளியிடுகிறேன்.

நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்குத் தாங்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.

////  துபாயில் பெண்கள் தொழுகை பற்றி எழுதி அனுப்ப முடியுமா. . ?///


*****************

தேனக்கா சாட்டர்டே ஜாலி கார்னர் என்னும் பதிவு போட்டு வருகிறார்கள், என்னையும் அழைத்தார்கள், ஆனால் என்னிடம் துபாயில் பெண்கள் தொழுகை பற்றி சொல்லுமாறு கேட்டு கொண்டார்கள், ரொம்ப சந்தோஷம் நான் இந்த டாப்பிக்கை மிகவும் வரவேற்கிறேன்.


தேனக்கா என்னை பற்றி குறிப்பிட்டது.

என் வலைத்தளத் தங்கை ஜலீலா கமால். சமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பதிவில் அட்டகாசமான சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார். 

சென்னை ப்ளாசா என்ற ஒரு கடையை ( ஹிஜாப், புர்கா , பர்தா , ஷேலா, மக்கானா  -- ஸ்பெஷல் ) நிர்வகித்து வருகிறார். (இவரது கடை பற்றி விவரம் உள்ள முகநூல் பக்கம் இது  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975)




( எல்லோரும் என்னை நிறைய இடத்தில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். வலைச்சரத்தில் , பிளாக்கில் , முகநூலில், அவர்கள் சமையல் பதிவில் தான் அறிமுக படுத்தி இருக்கிறார்கள்,

பேச்சுலர் வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, டயட் சமையல் என்று, ஆனால் தேனக்கா தான் நான்  வீடு, ஆபிஸ், சமையல் பிளாக் கையும் தாண்டி , சென்னை ப்ளாசா கடையையும் நிர்வகிப்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். எவ்வளவு பிஸியிலும் என்னை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறார்கள், மிக்க மகிழ்சி தேனக்கா.

 சென்னையில் ட்ரிப்ளிகேனில் ஒரு முறை அகஸ்மாத்தாக ஒரு மழைக்கால மாலை நேரம் சந்தித்து ஆச்சர்யப்பட்டுக் கை கொடுத்து அளவளாவி வந்தோம். மழைச்சாரல் போன்ற குளுமையான சிரிப்புக்குச் சொந்தக்காரர் ஜலீலா. அவரது பையனும் வந்திருந்தான். உடனே என் கணவரிடம் காமிராவைக் கொடுத்து ஒரு க்ளிக்கிக் கொண்டோம். ( நாந்தான் சுளுக்கும் அளவு சிரித்திருந்தேன் சந்தோஷத்தில் . :) 

//தேனக்கா நீங்க சுளுக்கும் அளவு சிரித்தேன் என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டாங்கஓ ஓ//

அவர் வலைத்தளத்தில் அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை என்ற பதிவைப் பார்த்துவிட்டு , பொதுவாக பெண்களை மசூதிப்பக்கம் பார்த்ததாக நினைவில் இல்லையே. மிகவும் ஸ்ட்ரிக்டான அந்த நாட்டில் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று ஒரு எண்ணம்  மனதில் எழ இப்படி ஒரு கேள்வி கேட்டேன் . அவரும் அழகாகப் பதில் சொல்லி இருக்கிறார். 


*****************************************************

தேனக்காவுடன் என் தீடீர் எதிர்பாராத சந்திப்பு 

நான் சற்றும் எதிர் பார்க்கல தேனக்காவை சந்திப்பேன் என்று. அந்தி மாலை நேரம் லேசான மழை சாரல் ரத்னா கேஃப் சைடில் ஜாம்பஜார் ,ஈ ஏ போகிற வழி ஒரு மாலைகடைக்கு அருகில் , முகநூலில் அடிக்கடி அவர்கள் புகைப்படம் பார்த்ததால் நான் தான் கண்டு பிடிச்சேன் , அன்று அவர்களுக்கு திருமண நாள் என்று நினைக்கிறேன் இரண்டு அவங்க அவஙக் ஹீரோ உடன் பளீச் சிரிப்புடன் எதிரில்வர நான் என் சென்னை ப்ளாசா கடைக்கு சென்று கொண்டு இருந்தேன். இருவருக்கும் ஆனந்தம் பொருக்கமுடியல ஒரு முன் ஏற்பாடும் இல்லாத தீடீர் சந்திப்பு . ஆஹா இப்ப நினைத்தாலும் ரொம்ப இனிமையாக இருக்கு .

 நான் சென்னை வாசியாக இருந்தும்,  வெளிநாடு வந்ததால் பலரை சந்திக்கும் வாய்ப்பு , பல திருமணங்கள், நிறைய மிஸ் பண்ணி இருக்கேன். 

பதிவர் சந்திப்பெல்லாம் வைக்கும் போது கூட என்னால் கலந்து கொள்ள முடியல. நிறைய பேரை நேரில் பார்க்கனும் என்ற லிஸ்டில் அன்பு தேனக்காவும், ஒரு வேளை அவர்களும் என்னை பார்க்கனும் என்று நினைத்துஇருப்பார்களோ என்னவென்று தெரியவில்லை சந்தித்து கொண்டோம்.



//வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!// 

 //அடிக்கடி /// தேனக்கா சொல்வதை  // நானும் அதை வழிமொழிகிறேன்.

சாட்டர்டே போஸ்ட் - துபாயில் பெண்கள் தொழுகை - ஜலீலாகமால் -
தேனக்கா பிளாக்கில் என் பதிவை மேலே உள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்



 சாதனை அரசிகளின் அரசி  ,32 பல்லழகியாகிய   தேனக்கா சும்மா என்ற வலைதளத்தில் சரளமாக பல விஷியங்களை அங்கு நம் அனைவருடனும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள், சுவையான செட்டி நாடு உணவு வகைகளுக்கும் தனியாக எழுதி கொண்டு இருக்கிறார்கள்.

///தேனக்கா சாட்டர்டே ஜாலி கார்னர் என்னும் பதிவு போட்டு வருகிறார்கள், என்னையும் அழைத்தார்கள், ஆனால் என்னிடம் துபாயில் பெண்கள் தொழுகை பற்றி சொல்லுமாறு கேட்டு கொண்டார்கள், ரொம்ப சந்தோஷம் நான் இந்த டாப்பிக்கை மிகவும் வரவேற்கிறேன்./


எனக்கு ஒரு ஆச்சரியம் யாரும் தேனக்காவை போல் இவ்வளவு ஆழமாக தொழுகையை பற்றி யோசித்து இருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனக்கு இதை பற்றி எழுது அளவுக்கு திறமை கிடையாது,இருந்தாலும் எப்படியாவது எழுதனும் என்று என் அனுபவத்தை வைத்தே எழுதினேன்.


தொழுகையை பற்றி விவரிக்க இன்னும் நிறைய இருக்கிறது, ஏதோ எனக்கு தெரிந்ததை இங்கு சொல்லி உள்ளேன், இங்கு என் பிலாக்கில் படிப்பவர்களுக்காக இங்கும் இந்த பதிவை இங்கு பதிந்துள்ளேன். இது தொழுகையை பற்றி தெரியாதவர்களுக்கு ஓரளவுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.


*********************************************************



கீழே உள்ள பதிவு நான் அவர்களுக்கு அனுப்பியது 








மற்ற மதத்தவர்களுக்கு பாங்கு கொடுக்கும் சத்தம் கேட்கும் போது அல்லா கூவுது என்பார்கள். தொழுகை நேரம் வந்து விட்டது  என்பார்கள். ரோட்டோரம் வசிப்பவர்கள் பாங்கு சொல்லும் சத்தம் கேட்பதை வைத்தே நிறைய பேர் கடிகாரம் பார்க்காமல் அவரவர் செய்யும் வேலைகளை நிர்ணயித்து கொள்வார்கள்.

ஆனால் நிறைய பேருக்கு  தொழுகை என்றால் என்ன?  அது எத்தனை வேளை தொழுகை, தொழுகைக்கு எப்படி தயாராகுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. 

எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.


தொழுகை என்பது    முஸ்லீம்களின் மதக்கடமைகளில் ஒன்றாகும்.

குழந்தைகளை ஏழு வயதில் இருந்து தொழுகைக்கு தயார் படுத்தவேண்டும்.
வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளையும் கண்டிப்பாக அல்லாஹ்வைத் தொழ வேண்டும். ஐந்து வேளை தொழுகைக்கு கால நேர அட்டவனையும் உண்டு.

மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது. .

தொழுகைக்கு மிகவும் சுத்தம் தேவை, பள்ளி வாசலில் கூறப்படும் பாங்கோசைக்கு பிறகு தொழ வேண்டும், தொழுவதற்கு முன் ஒலு(ழு)/Ablution எடுக்கனும் ஓலு என்பது இரண்டுகைகள், இரண்டு கை மணிக்கட்டுகள் , முகம், கண், மூக்கு, நெற்றி ,இரண்டு கால்கள் பிடரி வரை இவற்றை கழுவுவததாகும்.


நாம் தொழும் போது அல்லாவிடம் பேசுகிறோம் என்ற பயத்துடன் இறையச்சத்துடனும் தொழ வேண்டும்.தொழுகை என்பது இறைவணக்கத்துடன் கூடிய உடற்பயிற்சியும் ஆகும்.




பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள், ப்ரசவ நேரம் 40 நாட்கள் வரை  தொழகை கிடையாது. அவர்கள் சுத்தமானதும் தொழுகையை ஆரம்பித்து கொள்ளலாம்.
 நோன்பு காலங்களில் இந்த ஐ வேளை தொழுகை தவிர சிறப்பு தொழுகைகளும் உண்டு, அப்போது எல்லா பெண்களும் முடிந்தவர்கள் பள்ளி வாசலில் சென்று தொழுவார்கள்.
இங்கு பள்ளி வாசல்களில் ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து ஈ டி ஏ வில் தொழுகைக்கென இடம் ஒதுக்கி நோன்பு காலங்களில் 30 நாட்களும் பெண்கள் தொழ ஏற்பாடு செய்துள்ளார்கள். 

இங்கு பெரு நாள் தொழுகையின் போது ஈத்கா என்னும் பெரிய மைதானம் உள்ளது, அங்கு சென்று பெருநாள் தொழுகையை தொழுவோம் அங்கும் ஆண்களுக்கு தனி இடம் , பெண்கள் தொழுகைக்கு என்று தனி இடம் உண்டு. இங்கு பல நாட்டு பெண்கள் அதாவது நம் நாட்டு பெண்கள், அரபி பெண்கள், ஈரானி, சூடானி , கேரளா, பங்களாதேஷி, பாக்கிஸ்தான், என்று பல நாட்டு பெண்களையும் அங்கு சந்திக்கலாம்.  அங்கு சென்று தொழுதுவிட்டு அவரவர் சொந்தங்களை சந்தித்து வருவார்கள்.
 
பெண்கள் தொழும் இடம்.

 நான் முதல் முதல் துபாய் வந்த போது பள்ளி வாசல்களில் பெண்களுக்கென தனியாக தொழுகை இடம் இருக்கிறது என்பது தெரியாது. ஆகையால் எங்கு வெளியில் போவதாக இருந்தாலும் காலையில் இருந்து நான்கு வேளைத்தொழுகைகளையும் விட்டிலேயே முடித்து விட்டு தான் வெளியில் போவோம். கடைசி ஐந்தாவது வேளை தொழுகை மட்டும் வெளியில் சென்று வந்து  இரவு 12 மணிக்குள் தொழுது முடிப்போம். 

பிறகு தான் தெரிய வந்தது , ஏழு எமிரேட்ஸிலும் அதாவது துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன் , தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் (பள்ளி வாசல்) களும் இருக்கின்றன.

எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் பெண்கள் தொழுகை இடம் அமைந்து இருக்கும்.
அங்கேயே பாத்ரூம் வசதிகள் , ஒலு எடுக்கும் வசதிகள் , தொழும் இடம், உள்ளேயே குர் ஆன், தொழுகை விரிப்பு , தொழும் போது போட்டுகொள்ள புர்காக்கள் துப்பட்டாக்கள் எல்லாமே இருக்கும்.உடல் நிலை சரியில்லாதவர்கள் ,நின்று தொழ முடியாதவர்கள்  சேரில் அமர்ந்து தொழலாம்.எல்லா பள்ளி வாசல்களிலும் சேர்களும் போட்டு இருப்பார்கள்.

ஏழு எமிரேட்ஸிலும், துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன்  பெட்ரோல் பங்குகள், தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் களும் இருக்கின்றன.

இங்கு பல நாட்டு பெண்கள் அதாவது நம் நாட்டு பெண்கள், அரபி பெண்கள், ஈரானி, சூடானி , கேரளா, பங்களாதேஷி, பாக்கிஸ்தான் எல்லோரும் தொழ வருவார்கள்.
நிறைய பெண்கள் நம்மஊரில் எல்லோரோடும் இருந்து விட்டு இங்கு வந்து தனிமையாகிவிடுகிறார்கள்இப்படி பள்ளிவாசல்களில் பெண்களுடன் தொழ போகும் போது பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவர்களுடன் நட்பு வைத்துகொள்வதன் மூலம் அந்த தனிமையையும் போக்கிவிடலாம். ஏன் சில நேரம் நமக்கு தெரிந்தவர்களும் கூட சந்திக்க நேரிடலாம்.

எப்போதும் நாங்கள் தொலை தூரம் போவதாக இருந்தால்  ஜும்மாவை (  வெள்ளி மதிய தொழுகையை தான் ஜும்மா தொழுகை என்பதாகும்) தொழுகையை முடித்து விட்டு தான் கிளம்புவோம். ஜும்மாவை  வைத்து கொண்டு வெளியில் கிளம்ப எங்க ஹஸுக்கு பிடிக்காது. ஒன்று தொழுதுட்டு கிளம்பனும் , இல்லை அதிகாலை பஜர் தொழுதுட்டு கிளம்பி போய் ஜும்மாவிற்கு முன் போய் சேர்ந்து விடுவோம்.அப்படி ஜும்மா விற்கு முன் போக முடியவில்லை என்றால்  வழியில் இருக்கும் பள்ளிவாசல்களில் நிறுத்தி தொழுது கொள்வது போல் நேரத்தை வகுத்துகொள்வோம்.
வெள்ளிக்கிழமை தொழும் ஜும்மா தொழுகையை எல்லா ஆண்களும் கண்டிப்பாக பள்ளி வாசலில் தான் தொழ வேண்டும்,இப்போது பெண்களும் பள்ளிவாசலில் சென்று தொழுகிறார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பயணம் மேற்கொள்ளும் போது மட்டும் சிறப்பு சலுகையாக கிளம்பும் முன் அதை சுருக்கி தொழுது விட்டு கிளம்பிக்கொள்ளலாம்.


ஒரு முறை நாங்கள் ருவைஸ் போகும் போது 5 மணி நேர பயணம் வெள்ளிக்கிழமை வழியில் ஜும்மாவுக்கு ஒரு காடு மாதிரி இடம ஆனால் தொழுகைக்காக பள்ளிவாசல் இருந்தது, 
அங்கு சென்று பள்ளிவாசலின் பின் புறம் உள்ள பெண்களுக்கான தொழுகை இடத்தில் தொழுதுட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
அங்கு பல நாட்டு பெண்கள் தொலை தூரம் போகிறவர்கள் தொழுகைக்காக அங்கு வந்து தொழுத்துட்டு சொல்கின்றனர்.
அதே அடுத்து மஸ்கட் போகும் போது 5 லிருந்து 6 மணி நேர பயணம் , அங்கும் வழியில் தொழும் நேரம் செக்கிங் இட்த்தில் வண்டி நின்றது. அங்கு மக்ரீப் தொழுகை தொழுதுட்டு சென்றோம்.



இங்குள்ள பள்ளி வாசலில் மட்டும் என்றில்லை உள்ள எல்லா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்,ஹாஸ்பிட்டல்கள், எல்லா இடத்திலும் பெண்களுக்கு தனியாக தொழும் இடம் உண்டு.இங்கு துபாயில் ஷாப்பிங்க் காம்பள்ஸ்களில் ,கேரிபோர், கே.எம் ட்ரேடிங் ரீஃப் மால், அன்சார் மால் எல்லா இடத்தில் பெண்கள் குழந்தையுடன் சென்று தொழுது விட்டு ரெஸ்டும் எடுத்துக்கொள்ளலாம்.

ஊருக்கு செல்ல
 ஏர்போர்ட் சென்றாலும் அங்கும் பெண்களுக்கென்று தனியாக தொழுகை இடம் உண்டு.
குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அங்கு தொழுது விட்டு ப்ளைட் கிளம்பும் வரை  நிம்மதியாக சிறிது நேரம் ஒய்வெடுக்கலாம்.சமீபத்தில் சென்னை ஏர்போட்டிலும் பள்ளிவாசல் கட்டி இருக்கிறார்கள்
நான் ஆபிஸ்சென்று வீட்டுக்கு செல்லும் நேரம் பாங்கு கொடுத்தால், தொழுகை நேரம் வந்து விட்டால் அந்த நேர தொழுகையில் வழியில் இருக்கும் பள்ளிவாசலிலேயே தொழுது விட்டு செல்வேன்.அப்படி பள்ளிவாசல் சென்று தொழும் போது அவ்வளவு நல்ல இருக்கும். நிம்மதியாக எந்த வேலை டென்ஷனும் இல்லாமலும் தொந்தரவுகளும் இல்லாமல் தொழலாம், அந்த நேரம் மனம் மிக அமைதியாக இருக்கும் 

இதனால் ஐ வேளை தொழுகைகளை அந்த அந்த வக்துகளிலிலேயே (நேரங்களிலேயே) முடித்து கொள்ளலாம்.களாவாகும் வாய்ப்பில்லை. களா என்றால் விடுப்பட்ட காலையில் இருந்து விடுபட்ட தொழுகைகளை இரவு தொழுகையுடன் சேர்த்து தொழுவது. .
. 
தொழுகையின் முக்கியத்துவம்
அறிவிப்பாளர் : அபூஹுரைரா  (ரலி)
உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால்,அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி   அவர்கள் தம் தோழர்களிடம்வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது என்றார்கள். இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும் ! அல்லாஹ்  இத்தொழுகைகளின்மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான் என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்
ஆக்கம் 
ஜலீலாகமால்
துபாய்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

Thenammai Lakshmanan said...

அழகு ஜலீலா.

மிக சுவாரசியமா பகிர்ந்திருக்கீங்க. திரும்ப நான் ட்ரிப்ளிக்கேன் போய் வந்தேன். :)

திரும்ப ஒரு முறை ஆழ்ந்து படித்தேன். அன்பும் பாசமும் வழியுது உங்க இடுகையில். ஏந்திப் பிடிக்க முடியாமல் தத்தளித்தது நிஜம். நன்றிடா :)

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

TODAY : http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/The-Art-of-Hand.html

வெங்கட் நாகராஜ் said...

அங்கேயே படித்தேன்....

வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு அக்கா...
ரொம்ப அழகா பதில் சொல்லியிருக்காங்க...

Yasmin Riazdheen said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா..

அருமையான, இனிமையான சந்திப்பு அதை நீங்கள் பகிர்ந்த விதமும் அருமை.

தொழுகையை பற்றி மிகவும் அழகாகவே விவரித்துள்ளீர்கள்..

அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக.. ஆமின்..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா