Thursday, December 4, 2014

பாரம்பரிய கேரளா மீன் கறி - Kerala Special Traditional Fish Curry






இது முக நூல் மற்றும் அறுசுவை தோழி தளிகாவின் பாரம்பரிய மீன் குழம்பு. இதில் குடம்புளி சேர்ப்பதும், தேங்காய் எண்ணை சேர்ப்பதும் தான் இந்த ரெசிபியின் சிறப்பே. புளிக்கு பதில் குடம்புளியை கேரள மக்கள் பயன் படுத்துவார்கள்.



தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலொ
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி துருவல் அல்லது இடித்தது - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
குடம்புளி ஊறவைத்தது - 2
மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் அல்லது தேங்காய் பால் - 1 - 1.5 கப் தேங்காய் அரைத்தது
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது




( மீனை கழுவும் போது மஞ்சள் தூள் , அல்லது வினிகர் சேர்த்து கழுவி தண்ணீரை வடித்து கொள்ளுங்கள்,


செய்முறை

முதலில் தேங்காய் எண்ணை காயவைத்து வெந்தயம் சேர்த்து சிவந்ததும் இஞ்சி சேர்த்து பிறகு வெங்காயம்,ப்ச்சை மிள்காய் சேர்த்து சிவக்க வறுத்து அதில் தக்காளி சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து 30 செகன்ட் வதக்கியதும் தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதி வந்ததும் மீனை சேர்க்கணும்..பிறகு மூடி போட்டு தீயை குறைத்து ஐந்தே நிமிடம் தான் கடைசியாக தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமா சேர்க்கணும்.
இது சுலபமான ட்ரெடீஷனல் கேரளகுழம்பு.சுவை அருமையா இருக்கும்..காலை நேரமா செய்து வெச்சுட்டா மதியத்துக்குள் புளி இறங்கிடும் பின் புளியை தூக்கி போட்டுடலாம்.








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

3 கருத்துகள்:

Angel said...

அந்த இட்லிஸ் அப்படியே வாயில் போட்டுக்கலாம் அவ்ளோ அருமை ..
ரெசிப்பிக்கு நன்றி .எந்த வகை மீனும் குழம்பு செய்யலாமா இம்முறையில்
குடம் புளி இங்கும் கிடைக்குது அதை மீன் குழம்பு தவிர வேறு குழம்புக்கும் யூஸ் பண்ணலாமா ?

Unknown said...

Lipsmacking Fish curry Akka...Pls Konja parcel annupunga...Have never tried with coconut oil...

Asiya Omar said...

சூப்பர் ஜலீலா.நானும் இந்த குழம்பு செய்து பார்த்திருக்கேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா