Tuesday, May 27, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு - வெந்தயக்களி - ராபியத்துல் பஷரியா - 6

பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு - ராபியத்துல் பஷரியா - வெந்தயக்களி






இந்த மாதம் பாரம்பரிய குறிப்பை நம்முடன் பகிரவுள்ள சிறப்பு விருந்தினர் முக நூல் தோழி  மற்றும் அறுசுவை டாட் காம் வாசகி + தோழி  ராபியத்துல் பஷரியா அவர்களின் குறிப்பு அதை நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.

இதை சமையலில் 35 வருட அனுபவமுல்ல ராபியா அவர்களின் அனுபவ குறிப்பு. ராபியத்துல் பஷரியா மதுரையை சேர்ந்தவர்கள். ஒரு பெண் , இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் மகனுக்கு திருமணம் ஆகியது, மணமக்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது, கடைசி மகன் படித்து கொண்டிருக்கிறார்.


வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள் 

.வெந்தயம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தீராத வயிற்று வலி, இடுப்பு வலி , கால் வலி க்கு இந்த களி ( வெந்தய ஹல்வா) வை செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும். கழுத்து நரம்பு வலி, மூட்டு வலிக்கும் நல்லது..எலும்பு வலிக்கும் நல்லது,ஆண்களும் இதை சாப்பிடலாம்.


வெந்தயக்களி  (வெந்தய ஹல்வா)


பரிமாறும் அளவு  - ஒரு நபருக்கு


தேவையான பொருட்கள்

வெந்தயம் ‍ - இரண்டு தேக்கரண்டி

நல்லெண்ணை - ‍ கால் கப்

கருப்பட்டி வெல்லம் ‍ - இரண்டு கட்டி (அ) 100 கிராம்

தண்ணீர் அரை டம்ளர் - அரை டம்ளர்

செய்முறை


  1. வெந்தயத்தை களைந்து கல் நீக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ( இரவு ஊறவைக்கவும்)
  2. கருப்பட்டியை நன்கு இடித்து பொடித்து  அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு எடுத்து வடிகட்டி வைக்கவும்.
  3. ஊறிய வெந்தயத்தை நன்கு மையாக அரைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணை அரைத்த வெந்தயம் கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு சிறிது வற்றி வரும் போது அடிபிடிக்காமல் கிளறவும். 
  5. நன்கு எண்ணை மேலே தெளிந்து  லேகியம் போல் ஆகும் வரை சுருள கிளறி இரக்கவும். 
  6. இதை பெண்கள் மாதவிடாய் வரும் முன் தொடர்ந்து முன்று நாட்களுக்கு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடவும்.

கவனிக்க








கசப்பு தெரிந்தால் சிறிது தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.
இந்த ஒரு நபருக்கு அளவு முன்று வேளைக்கு சாப்பிட வரும்.

இன்னும் சுவை கூட வெந்தயத்துடன் சிறிது அரிசியையும் ஊறவைத்து அரைக்கவும்.
மேலும் தேங்காய் பால் சிறிது சேர்த்து கிளறி செய்யலாம். 

இது தோழி ராபியத்தில் பஷரியாவின் குறிப்பு. சாட்டில் சொன்னது நான் இங்கு செய்து போட்டுள்ளேன்.
***********************
வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள் - கிழே உள்ளது  என் டிப்ஸ்

வெரும் வயிற்றில் 5 வெந்ததயத்தை எடுத்து மாத்திரை போல் போட்டு தண்ணீர் அருந்தினால், எல்லாவிதமான நோயையும் சர்க்க்கரை வியாதியைவும் கட்டு படுத்தும், ( இது நான் என் பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு  வீட்டில் ரொம்ப வருஷமாக  வேலை பார்த்த பெண் (அவங்க இல்ல இல்லை) தினம் இதை சாப்பிடுவார்கள்.)

ஒல்லியாகனும் என்று நினைப்பவர்கள் வரும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.


இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை கொதிக்க வைத்து ஒரு டம்ளராக்கி குடித்து வருவது கூடிய சர்க்கரை வியாதிக்கு நல்லது.

வெந்தய பொடியை கருகாமல் வறுத்து பொடியாக்கி வைத்து கொண்டு புளி குழம்புகளில் , பொரியலில் கால் தேக்கரண்டி அளவு சேர்த்து கொண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

=========================************=================

நீங்களும்  உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்புகளை இங்கு என்னுடன் பகிர  விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகள் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

முகநூல் பேஜ்: https://www.facebook.com/Samaiyalattakaasam



Special Guest post with Traditional Recipe


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, May 25, 2014

பிட்சா ப்லேவர் சிக்கன் , புரோக்கோலி சாண்ட் விச்



பிட்சா ப்லேவர் சிக்கன் புரோக்கோலி சாண்ட் விச்


  1. சிக்கன் எலும்பில்லாதது ‍ 150 கிராம்
  2. புரொக்கோலி ‍ 50 கிராம்
  3. கேபேஜ் ‍ 50 கிராம்
  4. கேரட் 25 கிராம்
  5. கொடமிளகாய் ‍ 25 கிராம்
  6. வெங்காயம்  ‍ 1 
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ 1 தேக்கரண்டி
  8. ஒரிகானோ ‍ 1/2 தேக்கரண்டி
  9. உப்பு 
  10. சர்க்கரை
  11. பட்டர் + எண்ணை ‍ 3 தேக்கரண்டி
  12. ப்ரட் ‍ஸ்லைஸ் 10


செய்முறை


  1. ஒரு ப்ரை பேனில் எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு சிக்கன் மற்றும் ஒரிகானோ சேர்த்து வதக்கி 2 நிமிடம் வேக விடவும்.
  3. பிறகு கேரட், பீன்ஸ்,கேபேஜ் சேர்த்து வதக்கி கடைசியாக புரோக்கோலி, கொடமிளகாய்,உப்பு , சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி இரக்கி ஆறவைக்கவும்.
  4. பிரட் ஸலைஸ்களை பட்டர் சேர்த்து தவ்வாவில் இருபுறமும் பொன்னிறமாக  பொரித்து எடுத்து அதன் இருபுறமும் கெட்சப் தடவி. வதக்கிய பில்லிங்கை ப்ரட்டின் ஒரு புறம் வைத்து மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்.



இதை த்வ்வாவில் பொரிப்பதற்கு பதில் டோஸ்டரிலும் ஈசியாக் செய்துவிடலாம்.



இந்த சாண்ட்விச் ரொம்ப அருமையாக இருக்கும் , படங்கள் தான் சரியாக எடுக்க முடியவில்லை, நிறைய ரெசிபி படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ண முடியாமல் இருக்கு. இது முன்பு பிட்சா செய்துட்டு மீதி பில்லிஙகை இப்படி சாண்ட் விச்சாக தயாரித்து என் பையனுக்கு பள்ளி லன்ச்க்கு கொடுத்து அனுப்பினேன் . அங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது என்றான்.


Linking to Srivalli's Breakfast event
Ragi Rava Dosa

http://samaiyalattakaasam.blogspot.com/2014/03/ragi-dosai.html
Coconut Mini Pancake

http://samaiyalattakaasam.blogspot.com/2014/01/coconut-mini-pancake.html
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, May 14, 2014

சாஃப்ட் கோதுமைமாவு பூரி /Wheat Puri & உருளை கிழங்கு மசலா





சாஃப்ட் கோதுமைமாவு பூரி /Wheat Puri & உருளை கிழங்கு மசலா

Serves : 7 Person
Preparation Time + Cooking Time - 

Puri Baji/Puri Masala



தேவையான பொருட்கள்.

சக்கி ப்ரஷ் chakki fresh or daily fresh கோதுமை மாவு – 800 கிராம்
உப்பு – இரண்டு தேக்கரண்டி
சூடானா பால் – அரை டம்ளர்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – முக்கால் டம்ளர் + தேவைக்கு
இட்லி சோடா – ஒரு பின்ச்
செய்முறை
தண்ணீரில் உப்பு, இட்லி சோடா, சேர்த்து , மாவில் ஊற்றி கலக்கவும், சூடானா பாலையும் சேர்த்து நன்கு பிசையவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அதற்குள் தேவையான உருளை மசாலாவை தயாரித்து விடலாம்.

குழைத்த மாவை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சிறிய வட்ட வடிவ பூரிகளாக இடவும்.
ஒரு இரும்பு வானலியை சூடு படுத்தி ஒவ்வொன்றாக போட்டு பொங்க விட்டு சுட்டு எடுக்கவும்.


பூரியை கொதிக்கும் எண்ணையில் போடும் போது தீயின் தனலை மிதமாக வைக்கவேண்டும்.


பூரியை எண்ணையில் போட்டதும் சும்மா சும்மா திருப்பி போட கூடாது , அப்படி போட்டால் எண்ணை அதிகமாக உள்ளே  இழுத்து கொள்ளும்.





உருளை மசாலா ( இது என் அம்மாவின் ஸ்பெஷல் உருளை மசாலா)
 தேவையான பொருட்கள்.
உருளை கிழங்கு – அரை கிலோ

நீளமாக நருக்கிய வெங்காயம் – கால் கிலோ
பொடியாக நருக்கிய பச்ச மிளகாய் – 2

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிக்கை
உப்பு – ஒரு தேக்கரண்டி
தக்காளி – அரை பழம்


தாளிக்க

எண்ணை – 5 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது


செய்முறை

உருளை கிழங்கை குக்கரில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு போட்டு 4 , 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும். கிழங்கை எடுத்து தண்ணீரை வடித்து தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி எண்ணை விட்டு காயவைத்து கடுகு, காஞ்ச மிளகாய், உ.பருப்பு, க.பருப்பு கருவேப்பிலை, சிறிது வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கருகாமல் தாளிக்கவும்.
மீதி உள்ள எல்லா வெங்காயம் + பச்சமிளகாய் சேர்த்து வதக்கி மூடி போட்டு 2 நிமிடம் மடங்க விடவும்.
பிறகு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மேலும் 2 நிமிடம் வதங்க விடவும்.

பிறகு மசித்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்கு ஒரு சேர வேக விடவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.


சுவையான உருளை மசாலா ரெடி, இது என் அம்மாவின் செய்முறை பள்ளி நாட்களில் வாரம் ஒரு முறை கண்டிப்பாக காலை டிபனும் மதிய டிபனுக்கும் இதான். எனக்கும் ரொம்ப பிடிச்ச டிபன், அதே போல் என் பையன்களுக்கும் இதை செய்து சாண்ட்விச் போல செய்து கொடுப்பேன். என் பையன்களின் ப்ரண்ட்ஸ் பேவரிட்டாகவும் ஆகிவிட்டது. என் கணவரும் எடுத்து செல்வார், அங்கு எல்லாருடைய பேவரிட் டிபன் ஆகிவிட்டது.



கவனிக்க
பூரிக்கு மாவு குழைக்கும் போது கொஞ்சம் கெட்டியாக குழைத்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக போட்டு , லேசாக எண்ணை தொட்டு உருட்டவேண்டும். எண்ணை அதிக சூடும் ஆகக்கூடாது. பூரியை போட்டத்தும் அடிக்கடி பிரட்டி விடகூடாது. மாவு வட்டவடிவமாக சமமாக சற்று தடிமனாக உருட்டனும்.
How to Make Soft Puri?

முகநூலில் அனீஸ் பர்வீன் உமர் காக போட்டுள்ளேன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, May 9, 2014

Stone Head Cap/ Plain Head Cap - தொப்பி

Head Cap/Plain Head Cap/Stone Head Cap




Model No: YMM


வெயில் காலத்தில் தலைக்கு முட்டாக்கு போடுவதற்கு பதில் வீட்டில் இப்படி 

இந்த தொப்பியை அணிந்து கொள்ளலாம்.

அதே போல் புர்கா ஷேலா தலையில் இருந்து நழுவி விழாமல் இருக்க இந்த 

தொப்பியை தலையில் மாட்டி கொண்டு மேலே ஷேலா( ஷாலை) அணிந்து 

கொண்டால் ஷால் தலையில் இருந்து விழவே விழாது...

இந்த தொப்பி அணிவதால் இன்னொரு பயன் பள்ளி, காலேஜ்,ஆபிஸ்

 போகிறவர்கள் தலைக்கு குளித்து விட்டு அவசரத்தில் புர்கா ஷேலா போட்டு 

கொண்டு போகும் போதுஇந்த தொப்பி உள்ளே கட்டி இருந்தால் தலையில்

 உள்ள ஈரத்தை கூட இழுத்து விடும்.

கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கீமோ தரபிக்கு பிறகு தலையில் 

உள்ள முடி அனைத்தும் கொட்டி விடும், அப்படி உள்ளவர்கள் அழகாக இந்த 

தொப்பியை அணிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணையுடன் பூ எண்ணை சேர்த்து கலந்து தினம் தேய்த்து 

வந்தால் 3 மாதத்தில் மறுபடி கொட்டிய முடி வளற ஆரம்பித்து விடும்.



Model  No ; NG




Model No ; 042






அட்டை வைத்த தொப்பி தலையில் மாட்டினால் நல்ல ஸ்டிஃபாக இருக்கும்.




தொப்பி - ஹிஜாப் - thoppi


தலைக்கு போட்டு கொள்ளும் தொப்பி.








http://www.chennaiplazaki.com/

Address:
*Chennai Plaza*


No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)


(Near Marina Beach/Express Avenue/Rathna Café)


Triplicane ,



Chennai 600 005


Tel: 91 44 4556 6787


Jaleelakamal Dubai : (00 971 5 5453400)


feedbackjaleela@gmail.com


chennaiplazaik@gmail.com



  Like us on  Facebook Page


Join us on - Chennaiplaza   Facebook


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, May 6, 2014

சங்கரா மீன் சால்னா



மீன் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மீன் சங்கரா மீன் தான்..

Red Snapper Kuzambu


தேவையான பொருட்கள்


சங்கரா மீன் - அரைகிலோ

அரைக்க
வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3

தாளிக்க

எண்ணை - 5 ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல்  (தட்டியது)
வெங்காயம் பொடியாக அரிந்தது - சிறியது ஒன்று


பச்சமிளகாய் - 1
கொத்துமல்லி தழை  - சிறிது

கட்டியாக கரைத்த புளி - ஒரு கப்

தேங்காய் - 3 பத்தை அரைத்தது (அ) தேங்காய் பவுடர் - 3 தேக்கரண்டி


மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்னறை ஸ்பூன் ( அ) தேவைக்கு




செய்முறை 

மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்

வெங்காயம் தக்காளியை அரைத்து வைக்கவும்.

வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம்  பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளியை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

அனைத்து தூள் வகைகளையும்  ( மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்த புளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய பவுடரை வெண்ணீரில் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து கழுவி வைத்துள்ள மீனை போட்டு 5 வேகவைத்து இரக்கவும்.

கொத்துமல்லி தழை தூவி , ப்ளைன் சாதம் , மற்றும் சங்காரா மீன் வறுவலுடன் பரிமாறவும்.

கவனிக்க: இதை அதிக நேரம் வேகவிட்டால் மீன் உடைந்து சால்னா முழுவதும் முள்ளாகிவிடும். மீனை போட்டதும் கரண்டி வைத்து அடிக்கடி கிளறக்கூடாது, துணி கொண்டு சட்டியை பிடித்து லேசாகா சுழற்றி விடனும்.

இதில் இருக்கும் ஒரு இனிப்புதன்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். சங்கரா மீன் வறுத்தத்தும் குழந்தைகளுக்கு முள்ளில்லாமல் எடுத்து வைத்து கொடுத்தால் ஈசியாக சாப்பிடுவார்கள். ரொம்ப ஷாப்டாக இருக்கும், குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்.

டிப்ஸ்: முள்ளு மீன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து சாப்பிடுங்கள் , இந்த மீனுக்குன்னு தனியாக ஒரு சிறிய தட்டில் வைத்து சாப்பிட்டாலும் நல்லது இல்லை என்றால் சாதத்துடன் மீன் முள் கலந்து தொண்டையில் முள் குத்தி விடும். சாப்பிடும் போது பேசி கொண்டே சாப்பிடாதீர்கள்.

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை 



சால்னா/கிரேவி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/