Sunday, February 23, 2014

மிளகு முட்டை தோசை - Egg Dosa with Pepper - (பேச்சுலர்களுக்கு)


வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்கள் இதை சுலபமாக செய்து சாப்பிடலாம்.

காலை டிபன் அல்லது மாலை பசியாக இருந்தாலோ. இரவு டிபனுக்கோ இது போல் செய்து சாப்பிடலாம்.
ரொம்ப ஷாப்டாக இருக்கும் வயதானவர்களுக்கும் ஹெல்தியான டிபனாக இருக்கும்.


தேவையான பொருடகள்
முட்டை - 1
ஒன்றும் பாதியுமாக பொடித்த மிளகு - சிறிது
உப்பு - தேவைக்கு
தோசைமாவு.- 1 1/2 குழிகரண்டி
எண்ணை -  ஒரு தேக்கரண்டி


செய்முறை
தோசை தவ்வாவை காயவைத்து அதில் தோசைமாவை ஊற்றி தடிமனான பெரிய தோசையாக வார்த்து

அதில் முட்டையை கொஞ்சம் குலுக்கி முழுவதும் உடைக்காமல் மேலே சிறித ஓட்டை மற்றும் கொஞ்சமாக பிரித்து தோசையிம்ன் மேல் பரவலாக தெளித்து விடவும்.

உப்பு, மிளகு தூள் தூவி, சுற்றிலும் எண்ணையை ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து வேகவிடவும்.

சுவையான முட்டை தோசை ரெடி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 21, 2014

புற்றைக்கொள்ளும் செந்நிற பானம்

இதை முன்பு நேசம் மற்றும் உடான்ஸ் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் வைத்து விழிப்புணர்வு செய்தார்கள், இன்னும் அதிக அளவில் கேன்சர் நோய் சிறியவர்கள் பெரியவர்கள் என்றில்லாமல் அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது.. இது போல் உண்ணும் உணவிலாவதுகவனம் செலுத்தி ஓரளவுக்கு நாம் தடுத்து கொள்ளலாம்.

இதற்கு முன் நான் போட்டுள்ள சில பதிவுகளின் லின்குகள் கீழே உள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்.

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு வகைகள்

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் பெண்களுக்காக

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை - கதை

சிலருக்கு கேரட் ஆப்பிள், பீட்ரூட் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க பிடிக்க வில்லை என்றால் சூப் போல செய்து குடிக்கலாம்.


-- புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்

//இது முன்பு  எல்லாருக்கும் மெயிலில் வந்தது, இதை மறுபடி ஞாபகபடுத்துகிறேன்.//


முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள்காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட்பீட்ரூட்ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) 
உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) 
கல்லீரல்கணையம்சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடுஅல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) 
நுரையீரலை பாதுகாப்பதோடுஉயர் ரத்த அழுத்தம்ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) 
மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) 
கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) 
தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) 
முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) 
சீரணமண்டலம்தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) 
காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது


காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1



மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.



காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து 

பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.







இது 2 வருடம் முன்பு செய்த ஜூஸ், படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ணவில்லை. படம் சரியாக இல்லை என்றாலும் இந்த பதிவையாவது சிலர் படித்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்று தான் இந்த பகிர்வு.

என்னுடைய டிப்ஸ் 

இதில் பீட்ரூட்டில் பச்சை வாடை அடித்தால் சிறிது வேக வைத்து கொள்ளலாம். இல்லை இதையே பீட்ரூட், கேரட், ஆப்பிள் சேர்த்து சூப்பாக வைத்து குடிக்கலாம்.

கேக் வகைகள் செய்யும் போது கூட கலர் பொடிக்கு பதில்  பீட்ரூட்டை சாறெடுத்து ஊற்றி செய்யலாம்.

காய் கறி குருமா, பிரியாணி, சாம்பார் செய்யும் போது நான் எப்போதும் பீட்ரூட்டையும் சேர்த்து கொள்வேன். கலந்த சாதம் செய்வதற்கு பதிலாக பீட்ரூட் சாதமும் செய்து சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, February 19, 2014

பீட்ரூட் வறவு/பொரியல்/தோரன்


Beetroot Varavu/thoran/poriyal/Stir Fry

பீட்ரூட் வறவு என்றதும் என்ன இது வரவு என்று நினைக்கவேண்டாம்,

இது கேரளாவில் சிலர் பொரியலை , தோரன் என்றும் வறவு என்றும் சொல்வார்கள், இது ரொம்ப சிம்பிளான வறவு.


கேரளாவில் கண்ணூர், எர்னாகுளம், கொல்லம், திரிசூர் , தெல்லஷேரி,போன்ற இடங்களில் ஊருக்கு ஊர் உணவு வகைகளின் பெயர் வித்தியாம் உள்ளது. இது ரொம்ப சிம்பிளாகவும் ஈசியாகவும் தயாரிக்க கூடிய பொரியல்.

அன்றாட உணவில் வாரம் ஒரு முறையாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
பல நோய்களுக்கு அருமருந்து.கேன்சர் நோய் வராமல் தடுக்க இது போல் பீட்ரூட்டை அடிக்கடி பலவகைகளாக செய்து சாப்பிடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கலர் ஃபுல்லாக காரமில்லாமல் இருப்பதால் விரும்பி சாப்பிடார்கள்.





தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2

தாளிக்க

எண்ணை சன்ப்ளவர் ஆயில் (அ) தேங்காய் எண்ணை (அ) எல் கே நிர்மல் எண்ணை - ஒரு மேசைகரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
சீரகம் - அரை தேக்கரண்டி




செய்முறை

பீட்ரூட் தேலொடுத்து கழுவி மிகக்குறுகலாக பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.

வானலியை காயவைத்து  எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை , பச்சமிளகாய் போட்டு தாளித்து பீட்ரூட்டையும் சேர்த்து உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.
தீயின் தனலை மிகக்குறைவாக வைத்து நன்கு வேகவிட்டு இரக்கவும்.

அப்படியே சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட அருமையாக இருக்கும்.
Kerala Recipe - Beetroot Varavu/Thoran/Poriyal/Stir Fry
Linking to Walk through memory lane hosted by Amrita
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, February 15, 2014

சுக்கு சோம்பு பொடி & சுக்கு சோம்பு காஃபி



இந்த காஃபியை தினமும் அருந்தி வந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பு இருக்கு.சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது அருமருந்து.



சுக்கு சோம்பு பொடி

தேவையான பொருட்கள்

சோம்பு 25
சுக்கு 50
காய்ந்த புதினா இலை ஒரு கைப்பிடி
ஏலக்காய் பொடி  10 கிராம்
பனங்கற்கண்டு - 10 கிராம்

செய்முறை

சோம்பை கருகாமல் லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
சுக்கை வெயிலில் காயவைத்து தட்டி பொடிக்கவும்
புதினா இலைகளை ஆய்ந்து கழுவி வெயிலில் உலர்த்த்வும்.
ஏலக்காய், பனங்கற்கண்டு அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.



சுக்கு சோம்பு காஃபி

தேவையான பொருட்கள்

பால்  - 100 மில்லி
தண்ணீர் - 250 மில்லி 
சுக்கு சோம்பு தூள் - 3/4 தேக்கரண்டி (அ) ஒரு தேக்கரண்டி
காஃபி தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு



செய்முறை

பாலை தனியாக காய்ச்சி வைக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி பொடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கால் பாகத்தில் இருந்து அரை பாகம் வற்றும் போது பாலை சேர்த்து கொதிக்க வைத்து கடைசியாக சிறிது காஃபி தூள் சேர்த்து சர்க்கரை சேர்த்து கரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.

குறிப்பு:
இந்த சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.
மோஷன் ப்ராப்ளம் உள்ளவர்களும் இந்த பவுடர் போட்டு குடிக்கலாம். இது வயிறு வலிகேஸ் பிராப்ளம்வயிறு உப்புசம்செரிக்காமல் இருப்பவர்களுக்கு ஏற்ற அரும்ருந்து.

காப்பி தூள் அதிகம் இதில் சேர்க்க தேவையில்லை ஒரு வாசனைக்கு தான்.


கவனிக்க:


என் டிப்ஸ் மற்றும் என் குறிப்புகளை காப்பி செய்து மற்ற தளங்களிலரென் அனுமதி இல்லாமல் போடாதீர்கள். அப்படியே காப்பி அடித்தாலும் என் லின்கை கொடுத்து இங்கிருந்து எடுத்து போட பட்டது என்று தயவு செய்து சொல்லவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, February 12, 2014

நெத்திலி மீன் கிரேவி/கூட்டு /தொக்கு - 2 - Anchovies Gravy




நெத்திலி மீன் 
Anchovies Gravy
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – 300 கிராம்

தாளிக்க

எண்ணை – 4 தேக்கரண்டி
கடுகுஅரை தேக்கரண்டி
காஞ்சமிளகாய் – 1
கருவேப்பிலைஇரண்டு ஆர்க்
இஞ்சி பூண்டு பேஸ்ட்ஒன்னறை தேக்க்ரண்டி

பச்ச மிளகாய் – 2 பொடியாக அரிந்த்து
வெங்காயம்இரண்டு பெரியது
தக்காளி இரண்டு
மிளகாய் தூள்ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்கால் தேக்கரண்டி
உப்பு தூள்  - தேவைக்கு
சிக்கன் மசாலாஒருதேக்கரண்டி
தனியாத்தூள்அரை தேக்கரண்டி

கொத்துமல்லி தழை. சிறிது

செய்முறை


நெத்திலி மீனை சுத்தம் செய்து தலையிலிருந்து வயிற்று புறம் வரை கீறி முள்ளை எடுக்கவும். நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் மிளகாய் தூள் உப்பு தூள் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊறவைத்து சிறிது எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும்.


 முள்ளில்லாத நெத்திலி மீன்.

சட்டியை காய்வைத்து எண்ணையை ஊற்றி கடுகு, காஞ்சமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு நன்கு வதக்கவும் வதங்கியதும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும்.



அடுத்து தக்காளியை நன்கு பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும். (இல்லை அரைத்தும் ஊற்றலாம்)
ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு மசாலாவாடை போனதும் பொரித்து வைத்துள்ள மீனை சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை மற்றும் பச்சமிளகாய் தூவி இரக்கவும்.
சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.
இதில் புளி சேர்க்க வில்லை/




ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்:  பொதுவாக இந்த நெத்திலி மீன் முள் எடுப்பதால் சால்னாவில் போட்டு கொதிக்க வைக்கும் போது உடைந்து விடும் அதற்கு முதலே லேசாக வறுத்து கொண்டு பிறகு சேர்த்த்தால் மீன் உடையாமல் நிற்கும்.



நெத்திலி மீன் தொக்கு

நெத்திலிமீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.





https://www.facebook.co/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, February 10, 2014

கேரளா பயறு கறி - Kerala Payaru kari

 

 
 
 
 

கேரளா பயறு கறி
Whole moong dal 
இது இங்குள்ள எல்லா சின்ன சின்ன  டீக்கடை பேச்சுலர்கள் சாப்பிடும் ரெஸ்டாரண்டுகளில் கண்டிப்பாக இந்த கறி வகை  கிடைக்கும்  இதை புட்டு  (ஆப்பம்க்கு தருவார்கள் , இடியாப்பத்துடனும் சாப்பிடலாம்நல்ல இருக்கும்.





தேவையான பொருட்கள்
குக்கரில் வேகவைக்க
சிறு பயறு – (முழு பாசிபருப்புஹோல் மூம் தால் – 150 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்ச மிளகாய் நீளவாக்கில் கீறியது – 3
இஞ்சி துருவியது – ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள்  - சிறிது
தேங்காய் பவுடர் – 1 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணை – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
காஞ்ச மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2


செய்முறை
பாசிபயிறை இரவே ஊறவைத்து காலையில் நன்கு களைந்து காலையில் அதன் தண்ணீரை வடித்து குக்கரில் போட்டு 350 மில்லி தண்ணீர்சேர்த்து வெங்காயம் தக்காளியை அரிந்து சேர்க்கவும்தேங்காய் பவுடரை சிறிது வென்ணீரில் கரைத்து அதையும் ஊற்றி இஞ்சி ,பச்சமிளகாய்,உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து குக்க்ரை மூடி 3, 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியது குக்கரின் மூடியை திறந்து லேசாக மசித்து விட்டு ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிது வெண்ணீர் ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
சுவையான கேரளாஸ்பெஷல் பயறு கறி ரெடி.


இதில் பெரும்பாலும் அவர்கள் தேங்காய் எண்ணையில் செய்வார்கள்ஆனால் இங்குள்ள ஷாப்களில் சன்ப்ளவர் ஆயிலில் தான் செய்கிறார்கள்.தேங்காய் பவுடருக்கு பதில் பிரஷ் தேங்காயில் பால் எடுத்தும் ஊற்றலாம்.
ஆபிஸ்க்கு காலை டிபன் கொண்டு செல்லவில்லை என்றால் ஆபிஸ் பக்கத்தில் உள்ள கடைகளில்தான் புட்டு பயறு கறி , அல்லது ஆப்பம்பயறு கறி வாங்கி சாப்பிடுவது. அப்படி சுவைத்ததில் செய்தது தான் இந்த கறி.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 7, 2014

கார்ன் பீஸ் மணி பேக் - Corn Peas Money Bag



 என் சிறப்பு விருந்தினர் பதிவாக தோழி ஆசியா வின் சமைத்து அசத்தலாமில்  => இங்கு சென்று படிக்கவும்.



கார்ன் பீஸ் மணி பேக்
Corn Peas Money Bag/Wontons/Potli


வித்தியாசமான அருமையான ஸ்டாடர் உணவு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் நாமும் தான். இது ஒரு இத்தாலி உணவு வகை.

இதை நம் சுவைக்கு ஏற்ப வித விதமான பில்லிங் வைத்து தயாரிக்கலாம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தகள் கொண்டு போகும் மதிய உணவு அப்படியே திரும்பி கொண்டு வருவது கண்டு கவலை படும் பெற்றோர்கள் இது போல் ஒரு அழகிய மூட்டை போல் செய்து அவர்கள் விருப்பப்படி , சிக்கன் மட்டன், முட்டை , காய் கறி வகைகளை வைத்து செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும் உங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ்.



தேவையானவை

மாவு குழைக்க

மைதா மாவு  -ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு - கால் தேக்கரண்டி 
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெது வெதுப்பான வெண்ணீர் -கால் டம்ளர்
என்ணை - ஒரு தேக்கரண்டி


செய்முறை வெண்ணீரில் உப்பு சர்க்கரை எண்ணை சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைக்கவும். குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.



பில்லிங் ரெடி செய்ய

ப்ரோஸன் ,ஸ்வீட் கார்ன்  (சோளம்)  - அரை கப்
ப்ரோஸன் பட்டாணி -  கால் கப்
முட்டை கோஸ் - துருவியது கால் கப்
கேரட் - பொடியாக அரிந்தது - ஒரு தேக்கரண்டி
கேப்சிகம் - பொடியாய அரிந்தது  - இரண்டு மேசை கரண்டி
பச்சமிளகாய் - பொடியாக அரிந்தது - ஒன்று
சர்க்கரை - 2 சிட்டிக்கை
வெங்காயம் - பொடியாக அரிந்தது - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவைக்கு
ஒன்றும் பாதியுமாக தட்டிய - கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
லெமன் சாறு  - அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த பூண்டு - இரண்டு பல் 
எண்ணை - இரண்டு தேக்கரண்டி




செய்முறை

ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணை ஊற்றி காயவைத்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து பட்டாணி மற்றும் கார்ன் சேர்த்து வதக்கி 1நிமிடம் வேக விடவும்.
பிறகு முட்டை கோஸ், கேரட், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி  உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக மிளகு தூள், சர்க்கரை, லெமன் சாறு சேர்த்து பிரட்டி அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிடவும்.

குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்டைகளாக்கி ஓவ்வொரு உருண்டையையும் வட்ட வடிவமாக பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு வைத்து எல்லாபக்கமும் ஒன்று சேர்த்துமூட்டை போல் பிடித்து அழுத்தி விட்டு மேலே சிறிது பூ போல பிரித்து விடவும்.


அதே போல் எல்லா உருண்டைகளையும் செய்து முடிக்கவும்.

இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து எல்லா மணி பேக் களையும் கருகாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.



How to make Money bag/Won tons/Potli - Step by Step












இது பார்க்க பாட்டிகள் அந்த காலத்தில் பயன் படுத்து சுருக்கு பை போல் இருக்கும்.

சுருக்கு பை கயிறு தயாரிப்பதாக இருந்தால் ஸ்பிர்ங் ஆனியனின் நீட்டான பச்சை நிற இலையை பொடியாக நூல் போல அரிந்து பில்லிங் வைத்து முடித்து மூட்டை போல் கட்டி முடிச்சி போட்டு வைக்கலாம்.
இது பார்க்க வித்தியாசமான ஷேப்பில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதே போல் உள்ளே வைக்கும் பில்லிங் சிக்கன் , மட்டன் , மற்றும் உங்கள் விருப்பம் போல் என்ன வைத்து கொள்ளலாம்.

Chinese Cabbage Money Bag/Wontons/Potli  @ Cook book Jaleela

*********************
இன்று எங்கள் திருமண நாள் , எங்களுக்கும் எங்கள்குடும்பத்தினர்களுக்கும் துஆ செய்யுங்கள்.







Chennai plaza <= Honey Comb Burka/Abaya

Chennai Plaza => Wholesale & Retail 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/