Saturday, March 30, 2013

ரவா கேசரி வித் பைனாப்பிள் - 2 /Rava Keesari with Pineapple








சாஃப்ரான் கேசரி இது என் தோழி கீதாவின் கேசரி

ஏற்கனவே இங்கு பைனாப்பிள் கேசரி போட்டு இருக்கிறேன்.அது என் தங்கை பஷிரா வின் குறிப்பு சரியான நெய் அளவுடன்.





தேவையானவை


அரை டம்ளர் ரவை
சர்க்கரை கால் டம்ளர்
பைனாப்பிள் துண்டுகள் கால் டம்ளர்
சாப்ரான் - 2 பின்ச்
முந்திரி 6
உப்பு 1 பின்ச்
யெல்லோ கலர் பொடி - 1 பின்ச்
பைனாப்பிள் எசன்ஸ் - ஒரு துளி






செய்முறை

முந்திரியை சிறிது பட்டரில் வறுத்து எடுத்து கொண்டு, அதில் ரவை ஏலக்காய் போட்டு வறுக்கவும்.
மற்றொரு அடுப்பில் ஒன்னேகால் டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவும்.




வறுத்து கொண்டுள்ள ரவை சிறிது சிவற ஆரம்பிக்கும் போது கொதித்து கொண்டுள்ள வெண்ணீரை ஊற்றி கிளறி
உடனே சாஃப்ரான், உப்பு , சர்க்கரை , கலர் பொடி அனைத்தையும் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி கடைசியாக முந்திரி சேர்த்து இரக்கவும்.
சுவையான பைனாப்பிள் மனத்துடன் சட் பட் கேசரி ரெடி

முன்றுhttp://h4hemh4help.blogspot.in/2013/03/wtml-march-2013.html பேர் சாப்பிடலாம்.


gayathri's walk through memory lane hosted bu hema

Jaleela - Ragi cake
(Nice Combo of Innovation Jaleela)



இந்த அவார்டு போன மாதம் போஸ்ட் செய்த குறிப்புக்காக விஜி கொடுத்தது


இங்கு செய்துள்ளது அவசரத்துக்கு கொஞ்சமாக கிளறும் கேசரி, பட்டர் சேர்த்து செய்தது

.

போனவாரம் ஹதராபாத் சிக்கன் பிரியாணி, சால்டட் பூந்தி ரெய்தா, சிக்கன் ஷேலோ ப்ரை. இது வரை காலை செய்து வைத்து விட்டு ஆபிஸ் போய் விட்டேன். மதியம் சாப்பிடும் போது இனிப்பு கூட இருந்தால் நல்ல இருக்குமேனனு 7 நிமிடத்தில் இந்த கேசரி ரெடி.வந்து லஞ்ச் பிரேக்கில் இதை செய்து நானும் ஹனீபும் சாப்பிட்டு விட்டு கடைசியாக அந்த கின்னத்தில் இருப்பது என் கணவருக்கு..
பட்டர் & பைனாப்பிள் ரவா கேசரி

சில நேரம் தீடீர் விருந்தாளி யார்  வந்தாலும் உட்னே சட்பட் கேசரி + பஜ்ஜி செய்ய இந்த கேசரி முறை உதவியாக இருக்கும்.






நிறைய பேர் இங்கு கமெண்ட் போட முடியாதவர்கள் அங்கு கமெண்ட் டோ உங்கள் கருத்தோ, சமையல் சம்பந்த பட்ட சந்தேகமோ கேட்கலாம்.

என் பையன் ஹாஸ்டலில் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டு இருப்பதால் நான் புர்கா பதிவுகள் மட்டும் தான் பேஸ்புக்கில் பதிந்து வந்தேன்.
அவர் படிப்பும் முடிய போகுது,இன்னும் கொஞ்சம் நாளில் இங்கு வந்தாலும் வருவார்.
என் பையனுக்கு துஆ செய்யுங்கள்
 அதுவும் இல்லாமல் நிறைய ஈவண்டுக்களுக்கு பேஸ்புக்கில் தான் லிங்க் கொடுக்க சொல்கிறார்கள். ஆகையால் இனி முடிந்த போது அங்கு இந்த லின்குகளை கொடுக்கிறேன்.



புர்கா ஆர்டர் விபரம் ஏதும் தேவைபட்டாலும் அங்கேயே கேட்கலாம்.








ஆர்டர் செய்தால் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்க ரெடி

Thursday, March 28, 2013

மினி மீல்ஸ் - South Indian Mini Thali







இந்த மினி மீல்ஸ் எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிக்கும், நேரம் கிடைத்தால் இது போல் வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுவது.
கிழே எல்லா லின்குகலும் இருக்கு, பார்ர்த்து உங்கள் பொன்னான கருத்தை தெரிவிக்கவும்.


கேசரி லட்டு குழ்ந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
நெய் குறைவாக சேர்த்து செய்து இந்த லட்டுகளை லன்ச் பாக்ஸுக்கும் அனுப்பலாம்.


லெமன் ரைஸ்  - எலுமிச்சை சாதம் இந்த கோடை வெயில்லு உடலுக்கு தரும் புத்துணர்வு, எங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது. இதற்கு சரியான காம்பினேஷன் மசால் வடை தான்



தயிர் சாதம் ஆகா வயிறுக்கு என்ன ஒரு இதம், நான் செய்யும் இந்த தயிர் சாதம் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.


ஆபிஸ்க்கு எடுத்து செல்ல மசலாவை மட்டும் வறுத்து திரித்து கொண்டு குக்கரில் ரொம்ப சுலமாக செய்யும் சாதம் இது. நிமிஷத்தில் ரெடி ஆகிடும்.




சேனையா? கருனையா? வடை சாப்பிட சாப்பிட எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது








Linking to Faiza's Passion on plate




Tuesday, March 26, 2013

தோடம் பழ ஷாப்டி கேக் - Grapefruit Pancake



எல்லா புகழும் இறைவனுக்கே என்ற வலைப்பூ எழுதும் , என் நீண்ட நாள் தோழி ஸாதிகா அக்காவின் குறிப்பு.
 கீழக்கரையை சேர்ந்த சென்னை வாசி என் அன்பு தோழி.
ஸாதிகா அக்கா அவங்க வலைப்பூவில் சமையல் குறிப்பு எழுதுவதில்லை 
பல சிறு கதைகள், பயணங்கள், சுற்றுலா, போன்ற பல ஜனரஞ்சக பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறார்கள்.குறிப்பாக அவர் கற்பனையில் உதிக்கும்கேரக்டர்களை மிகவும் தத்ரூபமாக உயிரோட்டமாக அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதுவது மிகவும் ரசிக்கதக்கது.
இவர் எழுதிய தயிர் பானைக்குள் பிரியாணியையும் சற்று நோக்குங்கள்.

ஸாதிகா அக்கா தயாரித்த சுவையான பட்டர் பிஸ்கேட் இட்லி ஷேப்பில் தயாரித்து வாயில் போட்டால் அப்படியே கரைவது போல் இருக்கும் 


புல் கிரில் சிக்கனை சூப்பராக சமைப்பார்கள்.  பேரன் ஆமிருக்கு செல்லமான யங் பாட்டி.

இது மட்டுமல்ல இரண்டு வருடம் முன் அவங்க வீட்டுக்கு நானும் மர்லியும் சென்ற போது, அசத்தலான கீழக்கரை ஸ்பெஷல் பெட்டிசும், ஹோட்டல் மிக்ஸர் ஆனால் ஹோம் மேட் இவங்க கைவண்ணத்தில் செய்தது, சுவை சொல்ல வார்த்தை இல்லை.



சென்னையில் உள்ள மூலை முடுக்கில் உள்ள எல்லா ரெஸ்டாரண்டையும் நமக்கு சுற்றி காண்பித்துவிட்டார்கள் , வெளிநாட்டிலிருந்து சென்னை செல்லும் பயணிகள் கவனத்துக்கு சென்னைக்கு போகும் முன் ஒரு முறை ஸாதிகா அக்கா பிளாக்கை தரோவாக பார்த்து விட்டு செல்லுங்கள்.

சாப்பாட்டை பற்றின கவலை இருக்காது.


தோடம் பழ ஷாப்டி கேக், தோடம் பழம் என்றால் ஆரஞ்சு பழம் என்னும் ஸ்வீட் லைம், நான் இந்த பழத்திலும் செய்து இருக்கிறேன், இந்த பேன்கேக்கை ஆரஞ்சு பழம், மொஸம்பி, கமலாவிலும் செய்துள்ளேன்

போஸ்ட் பண்ண பிறகு தான் ஸாதிகா அக்கா மொஸம்பி என்றால் ஆரஞ்ச் என்றார்கள், ஆகையால் மாற்றி உள்ளான்.
கிரேப் ஃபுரூட் என்று தான் நினைத்து கிரேப் ஃப்ரூட் அதிலும் செய்து பார்த்தேன்.


கிரேப் ஃபுரூட்  =   இது சுகர் பிராப்ளம் இருப்பவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாக அடித்து குடித்து வந்தால் சுகர் லெவல் கட்டு படும்.கொலஸ்ராயிலையும் கட்டு படுத்தும்



இந்த குறிப்பை   அறுசுவையில்  கூட்டாஞ்சோறு பகுதியில் பகிர்ந்து இருக்கிறார்கள், இது பல வருடம் முன் மங்கையர்மலரில் முதல் பரிசு வென்ற குறிப்பு.

பொதுவாக பேன் கேக் ( மைதா சேர்த்து செய்யும் முட்டை தோசை/அடை) காலை நேர டிபனுக்கும் , குழந்தைகளுக்கும் செய்து கொடுக்க்கும் இலகுவான ஹெல்தியான உணவு,

இதை நானும் ஏற்கனவே பல பேன்கேக்குகள் (மைதா முட்டை தோசை )இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.சற்றே வித்தியாசமான சத்தான ஸாதிகா அக்காவின் இந்த பேன்கேக்கையும் சுவைத்து மகிழுங்கள்


தேவையானவை

தோடம்பழம் - 3
வெள்ளை புட்டரிசி - 2 டம்ளர்
சர்க்கரை - 1 டம்ளர்
கெட்டி தேங்காய்ப்பால் - 2 டம்ளர்
முட்டை - 1
ஏலம் - 5
சமையல் சோடா - 1 பின்ச்
மைதாமாவு - 1/2 கப்
வனஸ்பதி(அ)நெய் - தேவைக்கு



செய்முறை

முதல் நாளிரவே அரிசியை அலம்பி, ஊற வைக்கவும்.
மறுநாள் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.




தோடம் பழத்தை நீர் சேர்க்காமல் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும்.



தோடம்பழச்சாறில் சர்க்கரை, சோடா, ஏலப்பொடி, அடித்த முட்டை கலந்து, அரைத்த மாவையும், மைதாவையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.




தோசைக்கல்லை அடுப்பில் வைத்து டால்டா அல்லது எண்ணெய் விட்டு ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து அடை ஊத்தப்பம் போல் ஊற்றவும். 


வார்க்கக்கூடாது. ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிப்போடவும்.
சுவையான, வித்தியாசமான, இனிப்பு அடை இது. நான்கு நாள் வைத்து இருந்தாலும் கெடாது.



*************


இதில் நான் கெட்டி தேங்காய் பால் எடுக்கவில்லை, நெய் க்கு பதில் பட்டர் + எண்ணை சேர்த்து கொண்டேன்.
கேக் செய்யலாம் என்று தான் வாங்கி வந்தேன். முட்டை சேர்த்து மைதா தோசை எங்க விட்டு பேவரிட் அதில் பல வித விதமாக செய்தவதுண்டு, வாழைபழ பேன் கேக்ம் , தேஙகாய் பேன்கேக், டுட்டி புரூட்டி பேன்கேக், ஆரஞ்சு பழ பேன்கேக், பம்கின் பேன் கேக் என்று செய்தவதுண்டு, ஆபிஸ் விட்டு வண்டி விட்டு இரங்கும் இடத்தில் உள்ள ஜியான்ட் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்ததும் முதலில் நான் வாங்குவது பச்சை பசேலுன்னு இருக்கும் பாலக், புதினா, கொத்துமல்லி ஒரு மண் அழுக்கு இல்லாம் சூப்பராக பேக் பண்ணி வைத்திருக்கும், அடுத்து நோட்டம் இடுவது பழங்கள், அப்ப கண்ணில் தென்பட்டது, இந்த கிரேப் புரூட் என்னும் தோடம் பழம் தான் .   இந்த பழத்தை பார்த்ததும் ஸாதிகா அக்கா ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வந்து செய்தாச்சு.,



ஆரஞ்சு பழம்
தோடம் பழம்
மொஸம்பி
மதுர நாரங்கா
கமலா
இது எல்லாமே ஒரே குடும்பம் தான் அப்ப்டின்னு நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிய படுத்தலாம்.





 Hudson Canola Oil Give Away. @ Vimitha's Hearty and Healthy -



Monday, March 25, 2013

அரைத்து விட்ட புரோஜன் வெஜ் சாம்பார - Frozen Veg Sambar



என் சின்ன பையன் சாம்பார் பிரியர், அவருக்காக விதவிதமாக சாம்பார் வைப்பது. ஜெமினிகனேசனை ஏன் சாம்பார் என்று சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் என் பையன் அந்த சாம்பாருக்கே சாம்பாராக இருப்பானோ.. நான் வைக்கும் சாம்பார் பிடிக்கும்.சாம்பார் மட்டும் வைத்தால் போதும் பூரி, ரொட்டி, சாதம் இட்லி , தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் வைத்து சாப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும். 



1. காய்கறி சாம்பார் 

2. கத்திரிக்காய் சாம்பார் 

3. சின்ன வெங்காய சாம்பார் வடை

4. கேரட் சாம்பார்


5. ஏழுகறி சாம்பார்





தேவையானவை
துவரம் பருப்பு –  100 கிராம்
பருப்பு வேகவைக்க
வெங்காயம் – 1 பெரியது
பூண்டு – 2 பல்
எண்ணை – ½ ஸ்பூன்
சீரகம்  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்  - ½ ஸ்பூன்

வேகவைக்க

வெங்காயம் – 1
தக்காளி  - 1
புரோஜன் முருங்க்க்காய் – 2துண்டு 4 துண்டு
புரோஜன் வெஜிடெபுள்ஸ்    – எல்லாம் தலா 1 மேசைகரண்டி
(கேரட், பீன்ஸ், பட்டாணி )
தண்ணீர் – 2 டம்ளர்
பச்சமிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

புளி – 3 மேசைகரண்டி ( அ) புளி ஐஸ் கியுப் 3

அரைத்து கொள்ள

தக்காளி – 1
பொட்டுகடலை – 1 ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 மேசை கரண்டி
கருவேப்பிலை – சிறிது

தாளிக்க
எண்ணை – நெய் – 1 ½ மேசைகரண்டி
கடுகு  - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெந்தயம்  - ¼ ஸ்பூன்
பெருங்காயம் – 2 சிட்டிக்கை



செய்முறை

பருப்பில் வேக வைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைத்து மசித்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற சட்டியில் வேகவைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைக்கவும்.
பாதி வெந்து வரும் போது அரைத்த மசாலா + புளி தண்ணீரை சேர்த்து நன்குகொதிக்க விடவும்.
 நன்கு கொதித்த்தும் மசித்த பருப்பை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து கொதிக்க விடவும். பருப்பு கொதிக்கும் போது அதிக தனலில் இருந்தால் உடனே பொங்கி விடும்.(அவ்ளாதான் பொங்கலோ பொங்கல் தான்)
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து சிறிது நெய்+ கொத்துமல்லி தூவி இரக்கவும்.
வாசமும் மணமும் ஸ்ஸ்ஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள்.






டிப்ஸ் -1: காய்கறி நிறைய இருந்தால்  அதை ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு வைத்து கொண்டால் எப்ப நினைத்தாலும் சாம்பார் வைக்கலாம்.

டிப்ஸ்- 2: குழந்தைகள் அவ்வளவாக காய் கறிகள் சாப்பிட மாட்டார்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சாம்பார் வைத்து அதில் கூடுமான்வரை 5 காய்கள் கலந்து வேகவைத்து செய்தால், காய்கறிகளில் உள்ள வெந்த சூப் தண்ணீர் சாம்பாரில் சேர்ந்திருக்கும். சாதத்தில் சாம்பாரை மட்டும் ஊற்றி சிறிது நெய் விட்டு பிசைந்து கொடுக்கலாம்.


டிப்ஸ்- 3: முருங்கக்காயும் நிறைய இருந்தால்  இரண்டு இன்ச் அகலத்துக்கு கட் செய்து ஃபிரீஜரில் போட்டு வைத்தால் தேவைக்கு எடுத்து பருப்பு முருங்கக்காய், கறி முருங்க்காய், கருவாட்டு குழம்பு போன்றவைகளுக்கும் பயன் ப்டுத்தலாம்.


இங்கு துபாயில் ஒரு பெரிய பரோட்டா சுட்டு சுட சுட சாம்பாரால் குளிக்க வைத்து சாப்பிடுகிறார்கள் .ஒன்று சாப்பிட்டாலே ரொம்ப நேரத்துக்கு பசி எடுக்காது என்கிறார்கள்.
இது இங்குள்ள ஹோட்டல்களில் பேச்சிலர்ஸ் இப்படி சாப்பிடுகிறார்கள்,
ரொம்ப பில்லிங்காகவும் திம்முன்னு இருப்பதாகவும் சொல்கிறார்கள்,

 எனக்கு சில காம்பினேஷன் தான் பிடிக்கும். பூரி ,பரோட்டா என்றால் சென்னா, பாஜி, மட்டன் வெஜ் சால்னா, வெஜ் சால்னா, மீன் சால்னா, இரால் கூட்டு இப்படி தான் பிடிக்கும்,
ஆனால் எங்க வீட்டில் பசங்க பூரி சப்பாத்திக்கு சட்னி, சாம்பார் என்று வைத்து  சாப்பிடுகிறார்கள், ஆகையால் அடிக்கடி சாம்பார் செய்வது. அதுவும் நல்ல தான் இருக்கு.
இது பேஸ்புக்கில் ஃப்ரண்ட் லிஸ்டில் இருக்கும் அப்ரஸ்ர் கேட்டதால் போட்டுள்ளேன்.

Linking to Gayathri's Walk through memory lane hosted by hema & vimitha's hutson & Cupo nation 27


Gayathri's Walk through memory Lane @ Hema's Adugemane.

புதினா சட்னி தோசை ரோல் - Mint Chutney & Dosa Roll




புத்துணர்வு தரும் புதினா சட்னி தோசை ரோல்

புதினா சட்னி  இட்லி,தோசை, பிரட் சாண்ட்விச், சேமியா, மக்ரூணி,அடை , மைதா தோசை, உப்புமா ,எல்லா வகை டிபனுக்கும் ,வடை பஜ்ஜி , உளுந்து வடை ,போண்டா,பகோடா  மாலை நேர சிற்றுண்டிக்கும், குஸ்கா கீ ரைஸ், பகறா கானா முதலிய சாதவகைகளுக்கும்  பொருந்தும்.





புதினா சட்னி - 2

தேவையானவை

ஃப்ரஷ் புதினா  - 1 கட்டு 
புளி - ஒரு சிறிய எலுமிச்சை சைஸ்
பச்ச மிளகாய் - 2
உப்பு - கால் தேக்கரண்டி  ( தேவைக்கு)
தேங்காய் பத்தை - 3 (2” சைஸ்)
வெங்காயம் - மீடியம் 1






கெட்டியாகவோ தண்ணியாகவோ அவரவர் விரும்பம் போல் அரைத்துகொள்ளலாம், தண்ணீராக அரைத்தால் அதை தாளித்து கொண்டால் நல்ல இருக்கும். தண்ணீயாக என்றால் ஒடு தண்ணீர் இல்லை சிறிது நீர்க்க அரைத்து கொள்ளலாம்.
செய்முறை 

புதினாவை ஆய்ந்து மண் போக நன்கு அலசி எடுக்கவும்.
முதலில் தேங்காய்,பச்சமிளகாய், புளியை அரைத்து கொண்டு அதனுடன் புதினா,உப்பு,வெங்காயம் சேர்த்து  மிக்சியில் அரைக்கவும்.




ஆபிஸ் க்கு எடுத்து செல்ல தோசையை வார்த்து கொண்டு அதில் ஜாம் போல் தடவி மேலே படத்தில் காட்டியுள்ளது போல் தடவி சுருட்டி எடுத்து செல்வேன். புதினா சட்னி தோசையில் ஊறி சாப்பிடவே ய்ம்மியாக இருக்கும்.

புதினா சட்னி/துவையல் மட்டும் வகைவகையாக அரைப்பேன்.இதில் சிலநேரம் இனிப்பு துவையல் போல் வால்நட், பேரிட்சை சேர்த்தும் அரைப்பேன். ஏற்கனவே ரெசிபி போட்டுள்ளேன்.




பச்ச பசேலுன்னு எங்க புதினா கொத்துமல்லி கருவேப்பிலை , கீரை வகை பார்த்தாலும் , பேய் மாதிரி அள்ளிக்குவேன்.


Dubai - Carrefour - Century Mall 
Green Leaves Section

பேச்சுலர் ஈவண்ட் ஆசியாவின் ரோல் ஈவண்டுக்காக செய்தது இணைப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது.




Linking to 
 Gayathri'sWalk through Memory Lane hostedby Hema's Adugemane