Tuesday, October 23, 2012

டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு



மழை காலம் ஆரம்பித்து விட்டாலே சேர் சகதி எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், பல் சாக்கடைகள் மேலே எழும்பி ஓடுவதாலும் அதில் உள்ள கிருமிகள் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள மககளை பாதிப்பதாலும் பல புதுப்புது  காய்ச்சல் வகைகள் வர ஆரம்பித்து விடுகிறது.

போன வாரம் எனக்கு தெரிந்த நபரின் குழந்தைக்க்கு காய்ச்சல் அதிகமாகி மூளையை பாதித்து குழந்தை இறந்து விட்டது.
என்ன காய்ச்சல் என்று கண்டு பிடிக்கவே வெகு நாட்கள் ஆகி விட்டதாம், கடைசியில் அது டெங்கு காய்ச்சலாம்.


இப்போது அதிகமாக பரவி வருவது டெங்கு காய்ச்சல், நானும் ஒரு வாரமாக இதை பற்றி எழுதி இது சம்பந்தமாக யாராவது பதிவு போட்டு இருந்தால் லின்க் கொடுக்கலாம் என்று தேடும் போது மனோ அக்காபதிவு கண்ணில்தென்பட்டது.

 முன்பே வலைச்சரம் எழுதும் போது மருத்துவ குறிப்புக்க்காக மாதேவி போட்டு இருந்த தகவல் லின்க் எடுத்து வைத்து இருந்தேன்.

மாதேவி  மனோ அக்காவும் இருவருமே கிடைத்த தகவலை வைத்து டெங்கு காய்ச்சலுக்கு  தீர்வு , அதற்கு இயற்கை மருத்துவம் பப்பாளி இலைச்சாறு என்று  எழுதி இருக்கிறார்கள்.



சளி தொல்லைக்கு இஞ்சி சாறு


வயிற்று பூச்சி அழிய வேப்பிலை சாறு

என்பது போல்

இனி துளசி சாறு, பப்பாளி இலை ச்சாறு இவைகளில் கூடுமானவரை அனைவரும் பயன் படுத்துவது நல்லது.

பொதுவாகவே அனைவரும் உணவில் பப்பாளி , துளசி இலைகளை காய்ச்சி வடிகட்டி சூப்புடன் கூட கலந்து கொடுக்கலாம். என்பது என் கருத்து.



மாதேவியின் பதிவு - டெங்கு, பன்றிக் காய்ச்சல்கள்


அண்மையில் பப்பாளி இலைச் சாறு டெங்குக் காச்சலின் போது வெண்குருதி சிறுதுணிக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் என இலங்கை மருத்துவர்கள் சிலர் அண்மையில் ஆய்வு செய்து கண்டறிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.



மனோ அக்காவின் பதிவு. டெங்கு காய்ச்சல். 

 குஜராத் ஆயுர்வேத பலகலைக்கழக ஆய்வு பன்றிக் காய்சலுக்கு காரணமான வைரசையும் மற்றெந்த வைரஸ் பாதிப்பையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் துளசிக்கு இருப்பதாகக் கூறுகிறது.


வெறும் வயிற்றில் ஒரு பப்பாளி இலையை அரைத்து அந்த சாறை மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். 2 அல்லது 3 ஸ்பூன் சாறு கிடைக்கும். காலையும் மாலையும் இப்படி குடித்து வரவேண்டும். இது டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது. 



நன்றி மாதேவி , மனோ அக்கா.
















5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... இணைப்பையும் பார்க்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அக்கா...

அனைவரும் படிக்க வேண்டிய பகிர்வு.

இமா க்றிஸ் said...

நல்ல தகவல். மனோ அக்கா பக்கம் முன்பே பார்த்தேன். மீதி இணைப்புகளையும் பார்க்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

தேவையான நேரத்தில் நல்லொதொரு பகிர்வு நன்றிங்கோ ...

Unknown said...

Good post akka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா