Thursday, September 27, 2012

காசா பணமா வாங்க சிரிக்க.



விடுபட்டு போன வலைச்சர நகைச்சுவை குறிப்புகள்.
நகைச்சுவைக்காக சில லின்குகள் எடுத்து வைத்து இருந்தேன்.

இதை அங்கு பகிர முடியவில்லை.






1. தங்கமணி சமையல என்னமா வருணிக்கிறார் .. 

வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய் 



தோழி -1 - உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக இருந்தாரே இப்ப பராவாயில்லையா?
தோழி 2: ஏதோ பரவாயில்லை காலையில் எழுந்ததும் காஃபி மட்டும் போட்டு தரார்








3. எப்படி பிட் அடிக்கலாம் , பயபுள்ளைக எப்படி எல்லாம் பிட் அடிக்கிறாஙக்.. 












‘‘என்னங்க... விழுந்துடுச்சு...  விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள். 

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’  என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி.





7.தங்கமணிக்கும் ரங்கமணிக்கும் சண்டை வந்தால் வீடு எப்படி இரண்டாகும் இங்க வந்து கொஞ்சம் பாருங்கள்




’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் 
ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை,  மொழியாக்கம் செய்து இங்கே தந்துள்ளேன்:- 





குழந்தைகளை எங்கு பார்த்தாலும் யார் போட்டோ அனுப்பினாலும் இப்படி ஒண்று சேர்த்து வைக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். யார் யார் வீட்டு செல்லங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Sunday, September 23, 2012

வலைச்சரத்தொகுப்புகள்




எங்க வீட்டு செல்லங்களுடன் வலை உலக தோழிகளின் வீட்டு செல்லங்களும்


17.9.12 லிருந்து 23.9.12 வரை/வலைச்சரத்தில் எழுத
ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கு மிக்க நன்றி



அனைத்து பதிவுகளையும் பொறுமையாக படித்து கமெண்ட் போட்டு ஆதரித்துவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.



கீழே உள்ள சுட்டிகளை சொடுகி பதிவுகளை படித்து கொள்ளலாம்.
 இது அனைவருக்கும் உதவும்.

நிறைய லின்குகள் எடுத்து வைத்து இருந்தேன். விடுபட்ட பதிவுகளை இங்கேயே ஒரு பதிவில் பகிரலாம் என்று இருக்கிறேன்.





பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது போலாகும். கீழே உள்ள சுட்டிகள் போல அடிக்கடி விழிப்புணர்வு பதிவுகள் போல அடிக்கடி போட்டால் நிறைய பேர் உஷாராவாங்க, ம்ம் என் பிள்ளையா அவனு(அவளு)க்கு இதபற்றியெல்லாம் தெரியாது. நான் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டார்கள்.ஒரு காலகட்டம் வரை அவர்கள் செயல்களை கூர்ந்து கண்காணியுங்கள்.

இப்போது உள்ள நவீன உலகில் குழந்தைகளை யாரும் சரிவர கவனிப்பதில்லை, சிலசமயம் ஓவர் செல்லம் கொடுத்து நொல்லி பப்பகளாக வளர்க்கிறார்கள். இப்படி வளர்ந்தால் சின்ன சின்ன ஏமாற்றம் , வலிகள் , எதையும் யோசித்து செயல் படும் பக்குவம் ஏதும் வருவதில்லை. இப்படி மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவுகள் எழுதினால், அனைவருமே விழித்தெழலாம்.

6. அட்டகாசமான அடுப்படிகள் 

7. பணம் படுத்தும் பாடு

8. இல்லக்கலவை 

இது எனக்கு ஒரு புக் மார்க்குக்காக போட்டு வைத்தது. 

Saturday, September 22, 2012

பாலக் ஹமூஸ் - Palak Hamuus



     பாலக் ஹமூஸ்

தேவையானவை

பாலக் கீரை - அரை கப்
வெங்காயம் - மீடியம் சைஸ் - 1
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி (தேவைக்கு)
Del Monte Chickpeas - டெல் மாண்டோ  கொண்டைகடலை - 25 கிராம் (25gram)
லெமன் ஜூஸ் - ஒரு மேசை கரண்டி
வறுத்த வெள்ளை எள் - தேக்கரண்டி
பூண்டு - ஒரு சிறிய பல்
ஆலிவ் ஆயில் - தேவைக்கு




செய்முறை


பாலக் கீரையை சுத்தம் செய்து பூண்டுவெங்கயாம் வேகவைத்த கொண்டை கடலை சேர்த்து வதக்கவும்.மிக்சியில் முதலில் வெள்ளை எள்ளை பொடித்து கொண்டு அதில் வதக்கியவறறை சேர்த்து அரைக்கவும்.உப்புமிளகு தூள் லெமன் ஜூஸ் கலக்கி பவுளில் ஊற்றவும்.
மேலே ஆலிவ் ஆயில் ஊற்றி பரிமாறவும்.


ஹமூஸ் அரபு நாடுகளில் குபூஸ் ரொட்டிநான் அயிட்டங்களுக்கு ஏற்ற சைட் டிஷ். 

பாலக் சேர்த்தது என் ஐடியா.கீரை சேர்ப்பதால் சத்து அதிகம்,சாண்ட்விச்களுக்கும் ஏற்ற ஸ்ப்ரெட். குழந்தைகளுக்கு நல்லது 




Linking to Del Monte Blogger Recipe Carnival and worldfoody

சில்லி சிக்கன் -Chili Chicken




சில்லி சிக்கன் 


தேவையான பொருட்கள்


சிக்கனில் ஊற வைக்க
சிக்கன் -  நுற்றி ஐம்பது கிராம் (எலும்பில்லாதது )
டெல் மாண்டோ டொமேடோ   பேஸ்ட் - ஐம்பது கிராம்
டெல் மாண்டோ டொமேடோ கெட்சப் - முன்று மேசைக்கரண்டி
சோயா சாஸ் - மூன்று மேசை கரண்டி
ஹாட் சாஸ் - ஒரு தேக்கரண்டி
மிளக்காய் தூள் – அரை தேக்கரண்டி
மேஹி சிக்கன் கிய்யுப்  - அரை பாக்கெட் 
பட்டர் - ஒரு மேசை கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி









 தாளிக்க
பட்டர்  - இரண்டு மேசை கரண்டி
பொடியாக அரிந்த கொட மிளகாய் - முன்று மேசை கரண்டி
பொடியாக அரிந்த கொத்துமல்லி - முன்று மேசை கரண்டி
பொடியாக அரிந்த கருவேப்பிலை - முன்று மேசை கரண்டி
 
பச்சமிளகாய் - ஒன்று




செய்முறை

1. சிக்கனில்  ஊற வைக்க வேண்டியவைகளை போட்டு (எண்ணை + பட்டர் தவிர)
10 நிமிடம் ஊறவைக்கவும்
2.  
சட்டியை காய வைத்து எண்ணை + பட்டர்  போட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து  வதக்கி சிம்மில் 10 நிமிடம் வேக வைக்கவும்
3. சிக்கன்  வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்துசிக்கனுடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
4. பரோட்டா,நான், நூடுல்ஸ், பிரைட் ரைஸு போன்றவைக்களுக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ் ஆகும்.








Linking to Del Monte Blogger Recipe Carnival and worldfoody



9.10.12 linking this recipe to Asiya's Feast of sacrifice event

Wednesday, September 19, 2012

மருதாணி கோன் செய்யும் முறை

மருதாணி கோன் செய்யும் முறை

மருதாணி டிசைன் தான் போட வரல கோண் ஆவது செய்து காண்பிப்போமே. மருதாணி பவுடர் வாங்கி இது போல் நாமே தாயாரித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் அடிக்கடி மருதாணி வைத்து கொள்ளலாம்.



தேவையானவை
மருதாணி கலவை
பிளாஸ்டிக் திக் கவர் 
ஸ்பூன்
கத்திரிக்கோல்
செலோ டேப்


செய்முறை



1.       திக் பிளாஸ்டிக் கவரை சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும். மருதாணி பவுடரை வெள்ளை மல்துணியில் சலித்து அத்துடன் நீலகிரி தைலம், திக்கான பிளாக் டீ,சிறிது சர்க்கரை சேர்த்து  உளுந்து வடை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.



2.       சதுர வடிவமாக வெட்டிய பிளாஸ்டிக் கவரை வேர்கடலை மடிக்கும் பொட்டலம் போல்  மடித்து செலோ டேப் போட்டு அங்கேங்கே பிரியாமால கீழிருந்து மேலாக ஒட்டவும்.



3.       பிறகு கலக்கிய மருதாணியை ஒரு ஸ்பூனால் உள்ளே எடுத்து நிறப்பவேண்டும். முக்கால் பாகம் நிறப்பினால் போதும்.



4.       மேலே உள்ள கால்பாகத்தை மடித்து சல்வார் டேப் போட்டு ஒட்டி விடவும்.

5.       மருந்தாணி கோன் ரெடி


டிப்ஸ்: பிளாக் டீக்கு பதில் கட்டியான புளிசாறும் சேர்க்கலாம். மருதாணி உடல் சூட்டை தணிக்கும். மாதம் ஒரு முறை வைப்பது அனைவருக்கும் நல்லது.







இது சாதியா வைத்து விட்டது



இது என் நாத்தனார் மகள் சைமா வைத்துவிட்டது





இது என் நாத்தானார் எனக்கு வைத்து விட்டது



இது நான் வைத்தது



மருதாணி டிசைன் அழகாக போடதான் வரல அதை எப்படி கோன் வடிவில் செய்யலாம் என்றாவது போடலாம் என்று இரண்டு வருடமுன் நானும் என் தங்கையை செய்ய சொல்லி போட்டோக்கள், ஆனால் சரியாக வரவில்லை, இதில் உள்ளது நானே ஒரு வருடம் முன் செய்து எடுத்து வைத்தது.

கடையில் வாங்கும் போது சில மருதாணி கோன் ஸ்மெல் அடிக்கும். என்ன கலக்குறாங்கன்னு தெரியல. 
இது போல் நாமே தயாரித்து வைத்து கொண்டால் தேவைபடும் போதெல்லாம் போட்டு கொள்ளலாம். 

தொழில் நுட்பங்களின் அணிவகுப்பு - வலைச்சரம் இரண்டாம் நாள் - 1



தொழில் நுட்பங்களின் அணிவகுப்பு  - வலைச்சரம் முன்றாம் நாள்  - சுட்டியை சொடுகி பார்க்கவும்..

பிளாக் , வெப்சைட் போன்றவைகளுக்கு தொழில் நுட்பதிவுகள் அவசியம் தேவை , அந்த லின்குகளை இங்கு பிறகு கொடுப்பேன். இப்போதைக்கு வலைச்சரம் பார்க்கவும்.