Sunday, August 30, 2009

மோர் குழம்பு -Moor kuzampu





தேவையான பொருட்கள்.


ஊறவைத்து எண்ணையில் வருத்து அரைக்க‌


எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி
அரிசி - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் ‍ இரண்டு பெரியது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் ‍ இரண்டு பத்தை பெரியது
வெந்தயம் - ஐந்து
உப்பு ‍ = ஒரு தேக்கரண்டி (அ)தேவைக்கு




மிக்சியில் அடித்து கொள்ள


மோர் - ஒரு டம்ளர்
தயிர் - ஒரு கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி


தாளிக்க‌


எண்ணை ‍ இரண்டு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - இரண்டு பல்
பொருங்காய பொடி = ஒரு பின்ச்
கருவேப்பிலை - ஆறு இதழ்
மஞ்சள் தூள் ‍= அரை தேக்க‌ரண்டி
கொத்துமல்லி தழை சிறிது






செய்முறை


1. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தனியாக வைக்கவேண்டும்.(எண்ணை ,கடுகு, காஞ்ச மிளகாய்,பூண்டு,கருவேப்பிலை, கொத்து மல்லி)


2. மோர் + தயிரை ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நுரை பொங்க அடித்து ரெடியாக வைக்கவும். (இதற்கு இரண்டு கப் மோரும் ஊற்றலாம் (அ) தயிறும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்தும் ஊற்றலாம்)






3. கடலை பருப்பு,துவரம் பருப்பு,அரிசி , தேங்காய்,பச்சமிளகாய்,சீரகம், வெந்தயம் அனைத்தையும் அரை மணிநேரம் ஊறவைக்க வேன்டும்.


4. ஊறவைத்ததை ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி தண்ணீரை வடித்து வருத்தெடுத்து ஆறவைக்கவேண்டும் ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும்.


5. அரைத்த கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.


6. நல்ல கொதித்து பச்ச வாடை அடங்கனும் கொதிக்கும் போது பொங்கும் அடி பிடிக்கும் இடை இடையே கிளறி விட வேண்டும்


7. மோர் தயிர் கலவையை கொதித்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றி கொதிக்க விடாமல் கலக்கி உடனே இரக்கவும்.
8. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் ஊற்ற வேன்டும்.
சுவையான மோர் குழம்பு ரெடி.


குறிப்பு


இதில் காய் தேவை படுபவர்கள் வெண்டைக்காயை அரிந்து தனியாக வதக்கி போட்டு கொள்ளலாம்.
இது வயிறு உபாதைகளுக்கு ஒரு அரு மருந்து தயிர் புளிப்பில்லாதது என்றால் குழந்தைகளுக்கும் நல்ல குழைவாக பிசைந்து ஊட்டி விடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள அப்பளம், மசால் வடை,பகோடா, பீட்ரூட் (அ) கேரட் பொரியல் செய்து கொள்ளலாம்.
இல்லை முட்டை அவித்து மசாலா போட்டு பொரித்து கொள்ளலாம், சிக்கன் மற்றும் மட்டன் பிரையும் நல்ல இருக்கும்.

நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம்

மோர் குழம்பு,

இந்த மோர் குழம்பு நான் கற்று கொண்டது 1993 யில் ஆனால் கொஞ்சம் சிம்பிளாக தான் , நான் இதில் பலவகைகள் செய்து பார்த்து விட்டேன் , அதாவது தயிரை கடைந்து தான் மோர் குழம்பு செய்வார்கள், தயிர் + மோர் , அல்லது மோர் மட்டும் வாங்கி செய்தால் சுவை சூப்பர், இதில் வெண்ண்டைக்காயை எண்ணையில் வதக்கி சேர்த்தால் வெண்ண்டைக்காய் மோர் குழம்பு, அப்படி யே வெறும் சாதத்தில் ஊற்றி பிரட்டி சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
இதற்கு வெறும் பீட்ரூட் பொரியல் மட்டும் போதும், , இல்லை துருவிய மாங்காய் தொக்கு, அப்பளம் , வயிறுக்கு இதம் அல்சர், வயிறு உபாதை உள்ளவர்கள், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஏற்ற அருமையான உணவு

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் செய்ய சொல்லி கொண்டிருந்தார்கள்

மிக்க நன்றி.

Unknown said...

நல்லாயிருக்கு அக்கா. நான் வேறு மாதிரி செய்வேன். இந்த முறை புதுசா இருக்கு செய்துபார்க்கிறேன்.

Jaleela Kamal said...

ந‌ட்புட‌ன் ஜ‌மால் செய்து பாருங்க‌ள்.
இது ரொம்ப ஈசியாக இருக்கும்.

வருத்து அரைத்து வைத்து கொண்டால் , 10 நிமிடம் தான் கொதிக்கவிட்டு, மோர் கலந்து தாளிக்கும் நேரம்.

Jaleela Kamal said...

பாயிஜா ஒவ்வொருத்தரும் ஒரு முறையில் செய்வார்கள், இத்தனை வருடமா நான் செய்வது இது போல் தான், எங்க வீட்டில்.எல்லோருக்கும் பேவரிட் இது. ரொம்ப லைட்டாக இருக்கும்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல ஒரு குழம்பு. செய்து சாப்பிடுகிறேன் அக்கா....

Jaleela Kamal said...

சப்ராஸ் அபூ பக்கர் வருகைக்கும் , செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்க்கும் மிக்க நன்றி

S.A. நவாஸுதீன் said...

நாங்க ரொம்ப சிம்பிளா மோர்க்குழம்பு செய்வோம். இது ரொம்ப பெட்டரா தெரியுதே. சேட்டன் கிட்ட சொல்லி செய்திட வேண்டியதுதான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம். இப்படி செஞ்சா மோர் குழம்ப இன்னும் இன்னும் மோர்னு கேட்டு வாங்கி சாப்பிட தோணுமாங்க!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏ தில் மாங்கே மோர்(குழம்பு!!!!)

SUFFIX said...

அங்கேயும் அல்மராய் தானா?

சீமான்கனி said...

அக்கா....நாங்க இத ரெம்ப சிம்ப்ளா செய்வோம் திடீர் குழம்பு....
அனால் இது வித்யாசமா இருக்கு....
ட்ரை பண்ணிடுவோம்...

Jaleela Kamal said...

//ம்ம்ம்ம். இப்படி செஞ்சா மோர் குழம்ப இன்னும் இன்னும் மோர்னு கேட்டு வாங்கி சாப்பிட தோணுமாங்க
ஏ தில் மாங்கே மோர்(குழம்பு!!!!)//

//ஆமாம் எங்க வீட்டில் தில் மாங்கே மோர் மோர் மோர் குழம்பு தான்.//

நன்றி ராஜ்

Jaleela Kamal said...

/அங்கேயும் அல்மராய் தானா?/


ஆமாம் ஷபி இங்கும் அல்மராய் நீங்க என்ன உங்கள் ஊரில் மட்டும் தான்ன்னு நினைச்சீஙக்ளா?

Jaleela Kamal said...

//அக்கா....நாங்க இத ரெம்ப சிம்ப்ளா செய்வோம் திடீர் குழம்பு....
அனால் இது வித்யாசமா இருக்கு....
ட்ரை பண்ணிடுவோம்//

கனி இது வருத்து அரைப்பது மட்டும் தான் வேலை மற்றபடி செய்வது ரொம்ப ஈசி

மின்னுது மின்னல் said...

அக்கா....நாங்க இத ரெம்ப சிம்ப்ளா செய்வோம்

//

ஹி ஹி அதே..!!

Jaleela Kamal said...

//அக்கா....நாங்க இத ரெம்ப சிம்ப்ளா செய்வோம்

//

ஹி ஹி அதே//

நன்றி மின்னுது மின்னல்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா