Monday, June 29, 2009

மனநோய் குணப்படுத்தும் சீரகம்


இது எனக்கு மெயிலில் வந்த தகவல்



நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா?

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.



இது மெயிலில் வந்த தகவல்


இது என் டிப்ஸ்

சீர் அகம் என்றால் உடம்பை சீர் படுத்துவது என்பது பொருள்.

உப்புமா, பொரியல், கூட்டு, வாயு கஞ்சி ரசம், கீரை எல்லாம் தாளிக்க ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்வது நல்லது.


8 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

இங்கு சில கேரள கடைகளில் பார்த்ததுண்டு, சாதாரன தண்ணீருக்கு பதில், வெந்நீரில் சீரகம் போட்டு கொடுப்பார்கள், இதையே நாம் வீட்டிலும் பழக்கப்படுத்தலாம்.

S.A. நவாஸுதீன் said...

சீரகத்துல இவ்ளோ விஷயம் இருக்கா. ரொம்ப நன்றி சகோதரி தகவல்களை பரிமாற்றத்திற்கு

S.A. நவாஸுதீன் said...

http://adiraijamal.blogspot.com/2008/12/blog-post_7088.html

இதையும் பாருங்கள்

Jaleela said...

//இங்கு சில கேரள கடைகளில் பார்த்ததுண்டு, சாதாரன தண்ணீருக்கு பதில், வெந்நீரில் சீரகம் போட்டு கொடுப்பார்கள், இதையே நாம் வீட்டிலும் பழக்கப்படுத்தலாம்.//





ஆமாம் ஷபி அவர்கள் வயிறூ சரியில்லை என்றால் சீரக கஞ்சி குடிப்பார்கள்.சமையல் குறிப்பில் போடுவேன்.


நம்ம வீடுகளிலும் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று தான் முன்பு மெயிலில் வந்த தகவல் அதை இங்கு போட்டேன்.



சீர‌க‌ க‌ஷாய‌ம் க‌ர்பிணி பெண்க‌ளுக்கு சுக‌ப்பிர‌ச‌வ‌த்திற்கும் கொடுப்பார்க‌ள்.

Jaleela said...

சகோதரர் ஷபி, நவாஸ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

//சீரகத்துல இவ்ளோ விஷயம் இருக்கா//.

ஆமாம் நவாஸ்

இது இன்னும் பெண்களுக்குள்ள பல நோய்களை குணப்படுத்தும், நீங்க லின்க் கொடுத்து இருக்கீங்க இப்ப தான் பார்த்தேன் அதே தகவல்.

நான் தான் கீழே மெயில் வந்த தகவல் என்று எழுதியிருந்தேனே?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருகுங்க.. நன்றி.. இது போல நிறைய எழுதுங்க..

Jaleela said...

வாங்க (குறை ஒன்றும் இல்லை) வருகைக்கு மிக்க நன்றி,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா