Friday, October 7, 2016

பாயில்ட் எக் சாண்ட்விச் - Boiled Egg Sandwichபாயில்ட் எக் சாண்ட்விச்

எல்லாசத்துக்களும் ஒன்றாக அடங்கிய பவர் பேக் சாண்ட்விச்

தேவையானவை
லாங் பண் அல்லது ப்ரவுன் ப்ரெட் அ நார்மல் ப்ரட்
அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியது
மயாணஸ்
மிக்ஸ்ட் சாலட்
புதினா சட்னி
டொமேட்டோ கெட்சப்

காலை உணவுக்கு  லன்ச் பாக்ஸ் க்கு , அல்லது  இரவு உணவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க ஈசியான ஹெல்தியான சாண்ட் விச்

ப்ரட் அல்லது பண்ணை டோஸ்ட் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அரேஞ் செய்து உங்கள் செல்ல குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


வெஜிடேபுள்ஸ்
கிரீன் சட்னி
முட்டை
முன்றும் சேருகிறது.
லன்ச் பாக்ஸ் ரெசிபி, ஈசியான காலை மற்றும் இரவு உணவு
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 26, 2016

டார்க் சாக்லேட் ப்ரௌனி கேக்
டார்க் சாக்லேட் ப்ரௌனி கேக்


தேவையான பொருட்கள்

டார்க் சாக்லேட் – 50 கிராம்
கோக்கோ பவுடர் – 1/3 கப்
மைதா – 1/3 கப்
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
ப்ரவுன் சுகர் – 1/3 கப் (அ) நார்மல் சுகர்
பட்டர் – 3 மேசைகரண்டி
சால்ட் – ¼ பின்ச்
முட்டை – 2
நட்ஸ் மெகடேமியா நட்ஸ் – 3 மேசைகரண்டி
வென்னிலா எசன்ஸ் – 3 துளிகள்


செய்முறை

மைதா பேக்கிங் பவுடர் கோக்கோ பவுடரை சலித்து வைக்கவும்.
டார்க் சாக்லேட் மற்றும் பட்டரை டபுள் பாயிலர் செய்யவும்.
உருக்கிய பட்டர் மற்றும் டார்க் சாக்லேட்டில் சர்க்கரையை பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையில் முட்டையை நுரை பொங்க அடித்து கலக்கவும்.
சலித்து வைத்த மைதா கோக்கோ பேக்கிங் பவுடரை சிறிது சிறிதாக தூவி கலக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி பேக்செய்யும் ட்ரேவில் ஊற்றி சமப்படுத்தி நட்ஸை பொடித்து தூவவும்.
ஓவனை  200 டிகிரி செல்சியசில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

கவனிக்க

டார்க் சாக்லேட்க்கு பதில் நார்மல் நட்ஸ் சாக்லேட்டும் சேர்க்கலாம்.
 ப்ரவுன் சுகருக்கு பதில் நார்மல் சர்க்கரையும்  சேர்க்கலாம்.https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, September 13, 2016

Eid Ul Adha Mubarak

🌺🌺அஸ்ஸலாமு அலைக்கும்🌺🌺🐐
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தாருக்கும் சென்னை ப்ளாசா சார்பாக இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்🌺🌺
முகநூல்: chennai plaza
Fb Group: Dubai Burka Shawl & Hijab
இப்படிக்கு
ஜலீலா கமால்
ஆர்டர் செய்ய கிழே உள்ள வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
00971 55 9608954🐐🐐💐💐

Morning Tiffin
Eid Menu
mutton semiya
lemon cake
pomegrante roo apsha juice
Agar agar
karuveeppiali chutney
Dubai Fili and srilankan masala Tea

Today Chennai Eid 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, July 29, 2016

ஆப்பம் - Appam

தேவையான பொருட்கள்
ஊற வைக்க
---------
பச்ச அரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் கப்
சேர்த்து அரைக்க
---------------
சாதம் - ஒரு கை பிடி
தேங்காய் துருவல் - கால் முறி

செய்முறை


அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.
எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.
 
(ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வானலியில் கொஞ்ச்மா எண்ணை விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக அரிந்து சுற்றி முழுவதும் தடவவும்.
அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).
ஒரு ஆழாமான இரும்பு வானலியில் சிறிது எண்ணை ஊற்றி துடைத்து விட்டு  தீயின் தனலை மீடியாமாக வைத்து ஓவ்வொரு ஆப்பமாக ஊற்றி எடுக்கவும்.
ஏலக்காயுடன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பாலெடுத்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து ஆப்பத்துடன் சாப்பிடவும்.

தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேங்காயுட‌ன் ஏல‌க்காய் சேர்த்து பால் எடுத்து வ‌டிக்க‌ட்ட‌வும்.
தேவைக்கு ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்து ஆப்ப‌த்துக்கு தொட்டு சாப்பிட‌வும்.
இது குழ‌ந்தைக‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.


குறிப்பு:
வெந்தயம் சேர்ப்பது மொருகலாக சிவற‌,ஜவ்வரிசி, சாதம் சேப்பது பஞ்சு போல் வர எல்ல வ‌கையான குருமாக்களும் இதற்கு பொருந்தும். முட்டை வட்லாப்பம் ரொம்ப நல்ல இருக்கும், தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவல் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்ததை கூட சேர்க்கலாம்.


தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேங்காயுட‌ன் ஏல‌க்காய் சேர்த்து பால் எடுத்து வ‌டிக்க‌ட்ட‌வும்.
தேவைக்கு ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்து ஆப்ப‌த்துக்கு தொட்டு சாப்பிட‌வும்.
இது குழ‌ந்தைக‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.
காலை இரவு நேரத்துக்கான இதமான லைட்டான டிபன் வகை.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, July 24, 2016

அடை தின்ன பழகு - Healthy Adai

வாங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய  Jabong / Myntra
இப்பொழுது இருக்கும் அவசர உலகில் ஆன் லைன் ஷாப்பிங் தான் அனைவரும் விரும்புவது.
இது வரை நான் எதுவும் ஆன் லைனில் வாங்கியதில்லை. எனக்கு என் வீட்டை சுற்றி எல்லாமே கிடைப்பதாலும் , ட்ரெயின் வசதி இருப்பதாலும்  எனக்கு ஷாப்பிங் என்பது பெரிய விஷியமில்லை.

முன்பு என்பையனுக்காக ஒரு முறை வாங்கி இருக்கோம்.

சமீபத்தில் காலேஜில் ஹாஸ்டலில்  இருக்கும் என் பையன் ஆன் லைனில் Jabong  ஐபோங் இனைய தளத்தில் சில அயிட்டங்கள் வாங்கியதாக் சொன்னான், அமெரிக்காவில் இருக்கும் என் தம்பி இங்கு ஷாப்பிங் செய்ததாக சொன்னார்,

வெளிநாடுகளில் பேச்சுலர்கள் சிலருக்கு ஊருக்கு அனுப்ப இப்படி ஆன் லைன் ஷாப்பிங்க் இதன் முலம் தங்கள் தேவைக்கு பிடித்ததை இருந்த இடத்தில் இருந்தே சுலபமாக செலக்ட் செய்து ஊரில் இருக்கும்  உங்கள் அம்மாவுக்கோ, தங்கைக்கோ, உங்கள் அன்பு மனைவிக்கு கிஃப்ட் அனுப்பவோ இதை (Jabong) பயன் படுத்தலாம்.

வெளிநாடுகளில் இண்டஸ்ரியல் ஏரியாவில் வேலைபார்க்கும் பேச்சுலர்களுக்கு கடைக்கு போய் வாங்குவது கொஞ்சம் சிரமமான விஷியம். அவர்களுக்கு கண்டிப்பாக இதுபோல் ஆன் லைன் ஷாப்பிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொஞ்ச நாட்களாக பிளாக் தோழிகள் நிறைய ஈவண்ட் நடத்தி தங்கள் சொந்த செலவில் பரிசு கொடுத்து வந்தனர், இப்ப இது போல் Myntra  நிருவணங்கள் ஸ்பான்சர் செய்து அவர்களே பரிசு தொகையை வழங்கு கின்றனர்.
வலை தோழி பாரதி கமெண்டில் இந்த ஈவண்ட் பற்றி சொல்லி குறிப்புகளை இணைக்க படி சொன்னார்,********************************************************************************

ஆஹா என்ன ருசி அடை தின்ன பழகு


கோபு சாரின் அடை அவர் போஸ்ட் பண்ணதுமே செய்து பார்த்தாச்சு. நான் சுவைத்ததை நீங்களும் சுவைத்து மகிழுங்கள். அவர் கொடுத்த அளவு.அவருடைய செய்முறை


தேவையானவை

நயம் இட்லி புழுங்கல் அரிசி -  200 கிராம்
நயம் துவரம் பருப்பு                -  125 கிராம்
நயம் கடலைப்பருப்பு              -   50 கிராம்
LG பெருங்காய்ப்பொடி            -  1 சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்ற்ல்       -   8 எண்ணிக்கை
பச்சை மிளகாய்                        -   1 அல்லது 2 
தோல் நீக்கிய் இஞ்சி               -   1 சிறிய துண்டு
கருவேப்பிலை                         -   1 ஆர்க் [10-15 இலைகள்]
உப்பு                                             -   1 அல்லது 2 சிறிய ஸ்பூன்
செய்முறை

புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 


கவனிக்க

அடை அரைக்கும் போது சற்று கரகரப்பாக அரைத்தால் தான் சூப்பராக வரும்.
 மிக்சியில் அரைத்ததும் ரொம்ப மையாக ஆகிவிடும், அப்படி ஆகாமல் இருக்க ஒரு பகுதி லேசாக திரித்தது போல் இரண்டு சுற்று சுற்றி எடுத்து விட்டு மீதியை எப்போதும் அரைப்பது போல் அரைக்கலாம். மையாக இல்லை. முக்கால் பதம். அரைக்கும் போதே பருப்பு வகைகள் சீக்கிரம் அரை பட்டு விடும். கலக்கும் போது ஒரே சீராக ஆகிடும்.

இதில் சிவப்பு மிளகாயை குறைத்து கொண்டேன். இஞ்சியின் அளவை கூட்டி கொண்டேன்.பச்சமிளகாய் ஒன்று சேர்த்தேன்.
எப்போதும் அடை செய்யும் போது பெரும்பாலும் இஞ்சி பச்சமிளகாய் தான் சேர்ப்பேன். சிவப்பு மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் ஒன்றிரண்டு தான் சேர்ப்பது.இதில் சிவப்பு மிளகாய், பச்சமிளகாய், இஞ்சி சேருவதால் காரமும் கொஞ்சம் சுள்ளுன்னு இருக்கும்.Linking to Gayathiri's Walk through Memory Lane Feb- 13 hosted by Merry tummy  and Spicy Tasty Barathy's My Spicy Recipe - Giveaway event Jan 21 - Feb 25


காஞ்சிபுரம் இட்லி -Kanchipuram Idli

1. காஞ்சிபுரம் இட்லி
2.சாம்பார்
3. தக்காளி சட்னி
4.தேங்காய் சட்னி
5. கொள்ளு இட்லி

தேவையானவை
இட்லி அரிசி  - ½ கப் (100 கிராம்)
பச்சரிசி – ½ கப்
உளுந்து – ½ கப்
வெந்தயம் – ½ தேக்கரண்டி
இட்லி சோடா – 1 சிட்டிக்கை
உப்பு தேவைக்குதாளிக்க
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
ஊறவைத்த கடலை பருப்பு – 2 மேசைகரண்டி
கொர கொரப்பாக பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த முந்திரி – 2 மேசைகரண்டி
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் – 1
பொடியாக அரிந்த தேங்காய் – 1மேசைகரண்டி
துருவிய இஞ்சி – 1 தேக்கரண்டி

எண்ணை – தேவைக்கு
செய்முறை
உளுந்து + வெந்தயம் தனியாகவும், அரிசியை தனியாகவும் 4 லிருந்து  5 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் அல்லது கிரைண்டரில் முதலில்வெந்தயம் + உளுந்தை நல்ல் மையாக அரைத்து எடுத்து விட்டு அரிசியை கொஞ்சம் கொர கொரப்பாக (முக்கால் பதம்) அரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு பொங்கியதும் உப்பு + இட்லி சோடா கொஞ்சமாக தண்ணீரில் கலக்கி மாவுடன் சேர்த்து கலக்கி நன்கு கிளறவும்.தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இட்லிமாவுடன் கலக்கவும்.
இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணை தடவி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
இதற்கு தொட்டுகொள்ள இட்லி பொடி, தக்காளி சட்னி , தேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Linking to faiza's Passion on Plate

gayathiri's walk through memory laneசுரைக்காய் ஃபிஷ் கட்லட் (பர்கர்) சாண்ட்விச்

சுரைக்காய் ஃபிஷ் கட்லட் சாண்ட்விச்
Bottle guard Fish Cutlet with Sandwich

என் சமையல் முடிந்த வரை பிள்ளைகள் விரும்பி உண்ணும் வகையில் தான் இருக்கும். பிள்ளைகளுக்கு சாண்ட்விச் என்றால் ரொம்ப பிடிக்கும்.அதை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால். குழந்தைகளை காய்கறி மற்றும் மீன் வகைகளை சுலபமாக சாப்பிட வைத்து விடலாம்.
கொஞ்சம் வித்தியாசமாய் சுரைக்காய் ஃபிஷ் கட்லெட் சாண்ட்விச்.
தேவையானவை
மீன் வேக வைக்க
போன்லெஸ் ஃபிஷ் ஹமுர் அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிது (தேவைக்கு)
மிளகு தூள் – ¼ தேக்கரண்டி

மீனுடன் சேர்த்து பிசைந்து கொள்ள
துருவிய சுரைக்காய் – அரை கப்

வேக வைத்த உருளை – 1
வேக வைத்த கேரட் – கால் (ஒன்றில் கால் பாகம்)
வெங்காயம் – 1
பச்ச மிளகாய் – 1
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
கொத்துமல்லி  தழை – சிறிது
கிரம்ஸ் பவுடர் – 1 மேசை கரண்டி

கட்லெட் தோய்க்க
கிரம்ஸ் பவுட்ர் – தேவைக்கு
கார்ன் மாவு – சிறிது
முட்டை -1

செய்முறை
ஹமூர் மீனை சுத்தம் செய்து அதில் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.
அதில் துருவிய சுரைக்காய், வேகவைத்த உருளை மற்றும் கேரட்டை மசித்து சேர்க்கவும்.
வெங்காயம் பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு தூள் ,மிளகு தூள்,கரம்மசாலா தூளை சேர்க்கவும்
அடுத்து கொத்துமல்லி தழை + ஒரு மேசைகரண்டி கிரம்ஸ் பவுடரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வேண்டிய வடிவில் தட்டி
முட்டையில் முக்கி மேலும் கிரம்ஸ் + கார்ன் மாவு கலந்த கலவையில் தோய்த்து (நல்ல கோட்டிங் கொடுத்து)எடுத்து 1 மணி நேரம் பிரீஜரில் வைக்கவும்.
பிறகு தோசை தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு எல்லா கட்லெட் பொரித்து எடுக்கவும்.சாண்ட்விச் செய்ய
குபூஸ்
வெள்ளரி மற்றும் கேரட்
டொமேட்டோ கெட்சப்
பொரித்த பிஷ் பர்கர் (கட்லெட்)
ஹமூஸ் – தேவைக்குகுபூஸை பாதியாக பிரிச்சி அதில் ஹமூஸ் தடவி,கேரட் மற்றும் குக்கும்பரை வட்ட வடிவமாக அல்லது வேண்டிய வடிவில் வெட்டி  வைத்து பொரித்த கட்லெட்டை வைத்து கெட்சப் தடவி மூடவும்.
சுவையான வித்தியாசமான சுரைக்காய் ஹமூர் மீன் கட்லட் சாண்ட்விச் ரெடி.
குபூஸ் என்றில்லை இது போல்கட்லட் தயாரித்து சப்பாத்தி,பிரட் மற்றும் பண்ணிலும் வைத்து கொடுக்கலாம்

இது கட்லட் தான் ஆனால் பார்க்க பர்கர் போல இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மதிய உணவுக்கு பதில் இப்படி வைத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல பில்லிங்க்காக இருக்கும்.
கட்லட்டை முதல் நாளே செய்து வைத்து விட்டாலோ அல்லது செய்து பீரிஜரில் வைத்து கொண்டாலோ இந்த சாண்ட்விச் செய்வது மிக சுலபம்.

.இதில் ஸ்பெரட் செய்ய ஹமூஸ் இல்லை எனில் மயானஸும் தடவலாம்
இதை பண்ணில் வைத்து சாண்ட்விச் போல் செய்தால் நல்ல இருந்திருக்கும்.
இது முன்பு செய்த குறிப்பு.


 ( ஒரே தயிர் சாதம் , புளிசாதம் தானா என்று முகத்தை சுளிக்கும் பிள்ளைகளுக்கு நிறைய வித்தியாசமான சாண்ட்விச் களாக கொடுத்து அவர்களை அசர வைக்கலாம்)
அவசர உலகில் இப்போது அனைவரும் பாஸ்புட் களையே விரும்புகின்றனர். கொஞ்சம் மெனக்கெட்டால் நாமும் செய்யலாம்)
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam